வருத்தந்தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின் கண்ணும் என்றவாறு. |
உதாரணம் |
“யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்கலந்தனவே”1 |
(குறுந்-40) |
எனவரும். |
சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந்தொடுத்தற் கண்ணும் என்பது-யாதானும் ஒன்றை நுகரினும் நீ கையால் தொட்டது வானோர் அமிழ்தம் புரையும் இதற்குக் காரணம் சொல்லுவாயாக என்று அடிசில் தொடுத்தற் கண்ணும் பூத்தொடுத்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு; வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் சாந்து முதலியனவும் கொள்க. |
உதாரணம் வந்த வழிக் காண்க. |
“வேம்பின் பைங்காயென் தோழிதரினே தேம்பூங் கட்டி”2 |
எனத் தலைவன் கூறினமை தோழி கூறலானும் அறிக. |
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப் |
1. பொருள் : என் தாயும் நின் தாயும் யார் யாரோ? என் தந்தையும் நின் தந்தையும் என்னவுறவுடையர்? நீயும் யானும் ஒருவரை யொருவர் எப்படியறிவோம்? நெடிய மலையில் வெவ்வேறிடத்துப் பெய்த மழையின் நீர் ஓடி வீழ்ந்து ஓர் இடத்திற் கலப்பதுபோல நம் இருவர் நெஞ்சமும் ஒன்றுபட்டன அல்லவா?-இப்படித் தலைவன் திருமண முடிந்த பின்னர் ஒருநாள் அன்பை வியந்து கூறினான். |
2. பொருள் : முன்எல்லாம் வேப்பங்காய் போல் கசப்பான பொருளை என் தோழியாகிய தலைவி நுமக்குக் கொடுத்தாலும் அதை தேன்பெய்தமென்மையான கற்கண்டுக் கட்டி என உண்டீர். |