பக்கம் எண் :

42தொல்காப்பியம் - உரைவளம்
 

காமமும்  நோக்காது  பெயர்ந்தீர்  என்றானும்  கூறி   இதற்குக்  காரணம்  என்னை  எனத்  தலைவன்
வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி.
  

உதாரணம்
  

“உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லனோ பெரிதேநினைந்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராத்த கோடுதோய் மலிர்நிறை
யிறைத்துணச் சென்றற் றாங்கம்
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக்கொளவே”
1

(குறுந்-33)
  

எனவரும்.
  

ஏனைய  வாயிலோ ரெதிரொடு  தொகைஇ  என்பது-பெண்டிருமல்லாத  வாயில்களாயினார் எதிர்கூறுங்
கூற்றும் தலைவன் மாட்டு நிகழும் என்றவாறு.
  

இவையெல்லாம் காமப் பொருளாகத்2 தோன்றா, அவர் செயல் பொருளாகத் தோன்றும்.
  

உதாரணம் வந்தவழிக் காண்க.
  

பண்ணமைப்     பகுதி   பதினொருமூன்றும்    எண்ணருஞ்    சிறப்பிற்    கிழவோன்    மேன
என்பது-செய்தலமைந்த    பகுதியினையுடைய    முப்பத்து   மூன்றிடத்திலும்   நிகழும்   கூற்றுமிக்க
சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.
  

மிக்க   சிறப்பினையுடைய  கிழவோன்  மேலன  என்றமையால்  மிகாத  சிறப்பினையுடையார் மாட்டு
இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில் என்று கொள்க செயலமைப் பகுதி என்றதனான்,


1. பொருள் :  நின்னை  நினைத்தேன்.  நினைத்துக்  காமத்தைப்  பெரிதாக  நினைத்தேன். பெரிதாக
நினைத்தேனாயினும், நீண்ட மரக்கிளைகளைத் தோயும்படிப் பெருக்கெடுத்தோடிய வெள்ளம் ஓடி ஓடி
இறைத்து  உண்ணும்  அளவுக்குக்  குறைந்த தன்மைபோல என் காமமும்  நின்னிடத்து வந்ததனால்
குறைந்தது   நினைக்கும்   போது   யான் உலகத்தார்  இயல்பு இது  எனக்  கண்டு  மருண்டேன்
அல்லனோ?(இம்மருட்சியே மனைக்கு மீளச் செய்தது என்பது கருத்து).
  

2. காமம் பொருளாக-காமம் காரணமாக