பக்கம் எண் :

48தொல்காப்பியம் - உரைவளம்
 

சொல்லென     ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர்  அமிழ்தம்  புரையுமால் எமக்கென
அடிசிலும்  பூவுந்  தொடுதற்  கண்ணும்-அமுதிற்கு  மாறாகிய  நஞ்சை  நுகரினும் நீ  கையால்  தீண்டின
பொருள்   எமக்கு   உறுதியைத்   தருதலின்   தேவர்களுடைய  அமிழ்தத்தை  ஒக்கும்   எமக்கெனப்
புனைந்துரைத்து  இதற்குக்  காரணங்  கூறென்று  அடிசிலும்  பூவுந்  தலைவி   தொடுதலிடத்தும் கூற்று
நிகழும்.
  

உம்மை, இழிவு சிறப்பு.
  

“வேம்பின் பைங்காயென்றோழி தரினே
தேம்பூங் கட்டி யென்றனிர்”
 

(குறுந்-196)
  

எனத் தலைவன் கூற்றினைத் தோழி கொண்டு கூறியவாறு காண்க.
  

அந்தணர்     திறத்தும்  சான்றோர்   தேஎத்தும்  அந்தமில்  சிறப்பிற்  பிறர்  பிறர்  திறத்தினும்
ஒழுக்கங்காட்டிய  குறிப்பினும்-வேட்பித்த  ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார் கண்ணும்,
முற்ற  உணர்ந்து  ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவில்லாச் சிறப்பினையுடைய தேவர்கள்
கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைத்தான் தொழுது காட்டிய குறிப்பின் கண்ணும் :
  

“பிறர்     பிறர்”  என்றார்  தேவர்  மூவரென்பது  பற்றி,  தன்னையன்றித்  தெய்வந்தொழாதாளை
இத்தன்மையோரைத்   தொழல்   வேண்டுமென்று   தொழுது   காட்டினான்.  குறிக்கொளுங்  கூற்றால்
உரைத்தலிற் ‘குறிப்பினும்’ என்றார். உதாரணம் வந்துழிக் காண்க.
  

ஒழுக்கத்துக்     களவினுள்  நிகழ்ந்த  அருமையைப்  புலம்பி  அலமரல்  உள்ளமொடு  அளவிய
இடத்தும்-வணக்கஞ்  செய்தும் எதிர்மொழியாது வினாயவழிப் பிறராற் கூற்று நிகழ்த்தியும் எதிர்ப்பட்டுழி
எழுந்தொடுங்கியும்தான்  அக்காலத்து  ஒழுகும்  ஒழுக்கத்திடத்து  முன்னர்க்  களவுக்காலத்து  நிகழ்ந்த
கூட்டத்தருமையைத்  தனித்துச்  சுழலுதலையுடைய  உள்ளத்தோடே  உசாவிய  இடத்தும் தலைவற்குக்
கூற்று நிகழும்.
  

உதாரணம் வந்துழிக் காண்க. ‘கவவுக்கடுங்குரையுள்’ (குறுந்-132) என்பது காட்டுவாரும் உளர்’1


1. யார் எனத் தெரியவில்லை.