வோவியம் அழியுமளவும் அழியாதிருப்பது போல. நீயும் தாது தேடியுண்ணும் பறவை போல தலைவியின் நலனுண்டு அதனைத் திருப்பித் தருதலிருக்க அது விட்டுப் பொருள் தேடுதலில் நின் வேட்கை சென்றது என்றால் ஏதிலாராகிய யான் கூறுவது என்ன இருக்கிறது? இதில் தாயுயிர் தாவார் என்பது முன்னிலைப் புறமொழி. 1 துணிவு காட்டலும் - பாடம். * இச் சூத்திரம் தலைவன் தலைவி இருவரிடத்தும் கூத்தர்க்குரிய கிளவிகள் கூறுவதாக இளம்பூரணர் கொள்ள, நச்சினார்க்கினியர் உறுதி காட்டல்வரை தலைவியைப் பற்றியன என்றும் பின்னர் உள்ளன தலைவனைப் பற்றியன என்றும் கொண்டார். ஆசிரியர் இன்னாரைப் பற்றியன என வரைந்து கூறாமையின் இளம்பூரணர் கருத்தே ஏற்புடையதாம் என்பர் வெள்ளைவாரணனார். |