வுளர்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் ணன்ன நிறைச்சுனைதோறுந் துளிபடுமொக்குளெள்ளுவன சாலத் தெளிபொரு பொகுட்டிற் றோன்றுவனமாய வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்புதாஅய்ச் சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த வண்டுணறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு ணிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புகறந்தே”1 |
(அகம் - 324) |
அவைகள் தங்களுக்கு வளராப் பிள்ளை யென்றலுமாம். |
இது பெறுவளென்றது. |
ஆற்றது பண்பும். ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் உடன்போக்கினுங் கற்பினுங் கூறுவனவாதலின் இச்சூத்திரங் கைகோள் இரண்டற்கும் பொதுவிதி. |
169. | உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே. | (30) |
பி. இ. நூ. |
நம்பியகம் 94, இல. வி. 466. |
மடந்தையை ................... சென்றவற் காத்தலும் குற்றேவல் செய்தலும் ................... இளையோர் தொழில் என மொழிப. |
இளம். |
இதுவும் இளையோர்குரிய திறன் உணர்த்திற்று. |
இ-ள் : இடத்தினின்று குற்றேவல்செய்தலும் மெய் காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க் குளதாகிய நடையெல்லாம் இளையோர் கட்படும் என்றவாறு. உதாரணம் வந்தவழிக் காண்க. |
1 பொருள்: பக்கம் 244ல் காண்க. |