பக்கம் எண் :

கற்பியல் சூ.53297
 

இதனுள்,     வினைமுடித்த காலைத்  தேரிளையர்  செலவிற்கேற்ப ஊராது கோனூன்றின் உலகிறந்தன
செலவிற்குப்  பற்றாத குதிரைத் தேரேறி இடைச்சுரத்தில் தங்காது  மாலைக் காலத்து  வந்து  பூச்சூட்டினை
இனிது செய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க.
  

‘இருந்த வேந்த னருந்தொழின் முடித்தென’ என்னும் அகப்பாட்டி (384) னுள்
  

“புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியதல்லது வந்தவாறு
நனியறிந்தன்றோவிலனே
இழிமினென்ற நின்மொழி மருண்டிசினே
வான்வழங் கியற்கை வளிபூட்டினையோ
மானுருவாக நின்மனம் பூட்டினையோ
வுரைமதி வாழியோ வலவ”
   

என ‘உள்ளம் போல உற்றுழி உதவிற்று’ எனத்1 தலைவன் கூறியவாறு காண்க.
  

கற்பியல் நச்சினார்க்கினியர் உரை முடிந்தது.  


1 பொருள் :  பக்கம் 68ல் காண்க.