உதாரணம் |
“இனியவர், வரினும் நோய் மருந்தல்லாய் வாரா தவணர் ஆகுக காதலர் இவண்நம் காமம் படர்பட வருத்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரவரே”1 |
எனவரும். |
நச். |
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது. இன்னுழியாயிற் பெறுமென்றலின். |
இதன் பொருள்: மனைவி முன்னர்க் கையறு கிளவி -தலைவி முன்னர்த் தலைவன் காமக் கடப்பினாற் பணியுந்துணையன்றி நம்மைக் கையிகந்தானெனக் கையற்றுக் கூறுங்கூற்று, மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே -புலந்துவருந் தலைவிக்கு மருந்தாய் அவன் கூடுவதோர் ஆற்றல் உறுதி பயக்குமாயின் அவ்வாயில்கட்கு உளதாம் என்றவாறு. |
உதாரணம் |
“அறியாமையினன்னை யஞ்சிக் குழையன்கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல நெடுநிமிர்தெருவிற் கைபுகு கொடுமிடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலிற் கேட்போருளர்கொ லில்லைகொல் போற்றென யாண்டைய பசலை யென்றன னதனெதிர் நாணிலை யெலுவ வென்று வந்திசினே செருநரும் விழையுஞ் செம்மலோனென நறுநுதலரிவை போற்றேன் சிறுமை பெருமையிற்காணாது துணிந்தே”2 |
(நற்றிணை-50) |
1 பொருள் : இனிமேல் காதலர் வந்தாலும் நோய்க்கு மருந்தாய் அல்லாமல் ஆம். அதனால் அவர் இங்கு வாராமல் தாம் சென்ற அவ்விடத்தாராகவே ஆகுக. நம் காமம் நாம் துன்பப்பட வருத்திய நோய்போல் மலிந்த வருத்தத்தை அவர் காணாராகுக- இதை யாரோ ஓர் வாயில் கூறியதாகக் கொள்க. 2 பொருள் : அன்னாய்! நறுநுதல்! தலைவன் குழையனாய்க் கோதையுடையனாய்ப் பைந்தொடியணிந்து |