பக்கம் எண் :

கற்பியல் சூ.26237
 

“உண்கடன் வழிமொழிந் திரங்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்

பண்டுமிவ்வுலகத் தியற்கை”
1

(கலி - 22)
 

என்றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க.
 

நச்
 

இது வாயில்கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது.
 

இதன்  பொருள்:  முன்னிலைப்  புறமொழி - முன்னிலையாய் நிற்கின்ற தலைவனை நோக்கிப் பிறரைக்
கூறுமாறு  போலக்  கூறுதல் எல்லா வாயிற்கும் - பன்னிரண்டு   வாயில்களுக்கும்   பின்னிலைத் தோன்றும்
என்மனார் புலவர் - குறை வேண்டி முயலுங்கால் தோன்றுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.

 

உதாரணம்
 

“உண்கடன் வழிமொழிந்திரக்குங்கான் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கான் முகனும் வேறாகுதல்
பண்டுமிவ்வுலகத் தியற்கை யஃதின்றும்

புதுவதன்றே புலனுடை மாந்திர்”
2

தாயுயிர் பெய்த பாவைபோல
நலனுடையார் மொழிக் கட்டாவார் தாந்தந்நலந்
தாதுதேர் பறவை யினருந்திறல் கொடுக்குங்கா

லேதிலார் கூறுவதெவனோநின் பொருள் வேட்கை”
3

(கலி - 22)
 

எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக் கூறிற்று.


1 பொருள்:  உண்ணுதற்கு   வேண்டிக்   கடன்  பெறும் போது கடன் கொடுப்பார் வழியொழுகுவதாகச் 
சொல்லி இரக்கும்போது காணப்படும் முகப் பொலிவும், அக்கடனைத் திருப்பிக் கொடுக்க நேரும் போது
காணப்படும் முகமும் வேறு  வேறாக  இருத்தல் முற்காலத்திருந்து வரும் உலக இயற்கையாகும் - இது
தோழி கூறியது இக்கூற்று தலைவனை நோக்கியதாகும்.

2 பொருள்: இதே பக்கத்தில் காண்க.

3 பொருள்:  நற்குணம்  உடையார் தாம் சொன்ன  சொல்லில்  நிலையாய்  நிற்பர்;  எதுபோல்  எனின்
ஓவியம் எழுதுவோர் திறம்படச் சேர்த்த உயிர்த்தன்மை அவ்