பல்லாற்றானும் ஊடலிற்றணிதலும் என்பது -பலநெறி யாதும் ஊடலினின்றுந் தலைமகளை மீட்டல், அஃதாவது இவ்வாறு செய்தல் குற்றமென்றானும் அன்புடையார் செய்யாரென்றானும் மனைக்கிழத்தியர் செயலன்று என்றானும் இவ்வாறு கூறுதல். |
உறுதி1 காட்டலாவது - இவ்வூடல் தணிந்ததனாற் பயனிதுவெனவும் நன்மை பயக்கும் எனவும் கூறுதல். |
அறிவு மெய்ந்நிறுத்தலாவது - தலைமகள் மெய்யின் கண் மிக்க துணிவினாற்2 கெட்டவறிவை இது தக்கதன்றென அறிவு கொளுத்துதல். |
ஏதுவினுரைத்தலும்3 என்பது - இவ்வாறு செய்யின் இவ்வாறு குற்றம் பயக்கும் என ஏதுவினாற் கூறுதல். அதுபிறள் ஒருத்தி கெட்டபடி கூறுதல். |
துணியக் காட்டலாவது - அவள் துணியுமாறு காரணங் காட்டுதல். |
அணிநிலை யுரைத்தலாவது - இவ்வாறு உளதாகிய அணியைப் புலரவிடுகின்றதனாற் பயன் என்னையெனக் கூறுதல். |
இவையெல்லாங் கூத்தர் மேலன என்றவாறு. அவர் எல்லா நெறியினானும் புனைந்துரைக்க வல்லராதலான் அவர் மேலன என உரைத்தார். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு |
1 உறுதி - பயன், நன்மை. 2 மிக்க துணிவினால் - ஊடுதற்கு மிக்க துணிவால், மிக்க துனியினால் என்றிருத்தல் வேண்டும் என்பர் வெள்ளை வாரணனார். துனி-ஊடல். 3 ஏதுவின் உணர்த்தலாவது உதாரணம் காட்டியுரைத்தல், உதாரணம் ஒன்றையே காரணமாகக் காட்டியுரைத்தல், இளம்பூரணரின் இவ்வுரையைத் துணிவு காட்டலுக்கும் துணிவு காட்டலுக்குக் கூறிய உரையை ஏதுவின் உரைத்தலுக்கும் கூறுவர் நச்சினார்க்கினியர். ஏது, துணிவு என்னும் இரண்டும் காரணம் என்னும் பொருளில் இருவரும் ஆண்டாலும் துணிவு என்பது நிகழ்ச்சியின் முடிவில் கொள்வது ஆதலின் நச்சினார்க்கினியர் துணிவு என்பதற்கு உதாரணம் எனக் கொண்டதே பொருந்தும். அவர் உரை பார்க்க. |