பக்கம் எண் :

272தொல்காப்பியம் - உரைவளம்
 

என்ற   வழி,   யான்   இளிவரவு   எய்தேனென்றலிற்  புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க.
ஏனையவும் வந்துழிக் காண்க.
  

சிவ.
  

இச் சூத்திரம் தலைவன் தன்னைப் புகழும் இடம் உணர்த்துகின்றது.
  

இ-ள்   :  தலைவன்  தலைவி  முன்னர்த்  தன்னைப்  புகழும்  கூற்று  அவன்  அவளைப்  பிரியும்
வினையை அவளிடம் கூறும் போதாகும் என்றவாறாம்.
  

தலைவன்   தன்னைப்  புகழ்தல்  வேண்டுவதில்லை. தலைவன் புகழ்க்குச் சோர்வு காத்தல்  தலைவியின்
கடன்   என்பதைத்   திருவள்ளுவரும்  “தற்காத்துத்  தற்கொண்டாற்  பேணித்தகை  சான்ற  சொற்காத்துச்
சோர்விலாள்  பெண்”  என்னும்   குறட்பாவில்   குறித்துள்ளமையால்   தலைவி   தலைவனின் உயர்புகழ்
அறிந்தவளேயாதலின்   அவள்   முன்னர்   அவன்  தற்புகழ்தல்   தேவையற்றதாம்.   ஆனால்   அவன்
பிரியும்போது  அப்பிரிவுக்கு   ஆற்றாத   நிலையில்   அவன்  அவளைத்  தேற்று  முகத்தான் தன்னைப்
புகழ்தல் தகும் என்பதாம்.
  

எதிர்மொழி
   

180.

மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. (41)
 

பி. இ. நூ.
 
  

நம்பியகம் 100, இல.வி.468.
 
  

இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்
பிறவும் எல்லாம் மறையோற் குரிய.
  

இளம்.
  

இது பாங்கற்குரியதோர் மரபுணர்த்திற்று.
  

இது களவிற்கும் கற்பிற்கும் பொது. ஒப்பக்கூறல்1 என்னும் உத்தி வகையாற் கூறப்பட்டது.  


1 ஒப்பக்கூறல்-  ஒரு  பொருளுக்கு  இலக்கணம்  கூறும்போது அதனையொத்த பிறிதொரு பொருளுக்கும்
ஒக்குமாறு ஓரிடத்தில் கூறுதல்.