பக்கம் எண் :

274தொல்காப்பியம் - உரைவளம்
 

வந்துழிக்  காண்க.   ‘உரித்து’   என்றதனால்   தலைவன்  இடுக்கண்  கண்டுழி  எற்றினான்  ஆயிற்றென
அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க.
  

181.

குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.(42)
 

இளம்.
  

இதுவுமது.
  

இ-ள் : மேற் குறித்ததற்கு எதிர் கூறுதல் அருகித் தோன்றும் என்றவாறு, அது வந்தவழிக் காண்க.
  

நச்.
  

இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறுகின்றது.
  

இதன்   பொருள்:   குறித்து   எதிர்   மொழிதல்   -தலைவன்   குறிப்பினை  அவன்  கூறாமல்தான்
குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல். அஃகித் தோன்றும்-சுருங்கித் தோன்றும் என்றவாறு.
  

அவன்   குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே ‘காமநிலையுரைத்தல்’ (177) என்னுஞ்  சூத்திரத்தின்கட்
கூறிய  ‘ஆவொடு  பட்ட  நிமித்தம்’  ஆயின்   பார்ப்பான்   கூறக்கேட்டுத்தான் கூறவும்  பெறுமெனவும்
ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும் பெறுமெனவுங் கூறியவாறாயிற்று.
  

சிவ.
  

இச் சூத்திரம் பாங்கன் தலைவனிடம் கூற்று நிகழ்த்தும் போது கொள்ளும் குணம் கூறுகின்றது.
  

இ-ள்:  தலைவன்  கூற்றுக்கு எதிராக நீ இப்படித்தான் நடத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டுக் கூறுதல்
சிறுபான்மையாய்த் தோன்றும் என்றவாறு.
  

எதிர் குறித்து மொழிதல் என மாறுக. குறித்து மொழிதலாவது ஆணைபோல் மொழிதல்.
  

அஃகித் தோன்றும் என்பதற்கேற்ப உதாரணமும் இன்றாயிற்று.