யாப்புறு மரபின் ஐயரும் அமரரும் யாத்த கரணம் அழியும் என்ப. |
நம்பியகம் 91 |
பூத்த காலைப் புனையிழை மனைவியை நீரா டியபின் ஈராறு நாளும் கருவயிற் றுறூஉம் காலம் ஆதலின் பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன். |
இல: வி. 499 |
நம்பியகச் சூத்திரமே. |
இளம் |
இதுவுமது. |
இ-ள்: பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவாரல்லர் என்று சொல்லுவர் பரத்தையிற் பிரிந்த காலத்து என்றவாறு. |
பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்றுநாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க. |
நச் |
இது, பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்குந் தலைவிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. |
இதன் பொருள்: பரத்தையிற் பிரிந்த காலையான-பரத்தையிற் பிரிந்த காலத்தின்கணுண்டான, பூப்பின்நீத்து-இருதுக் காலத்தின்கட் சொற்கேட்கும் அணுமைக்கண் நீங்கியிருந்து புறப்பாடு ஈராறு நாளும் அகன்று உறையார் என்மனார் புலவர். அவ்விருதுக் காலத்தின் புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும் இருவரும் பிரிந்துறையாரென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
என்றது, பூப்புத் தோன்றிய மூன்று நாளுங் கூட்டமின்றி அணுகவிருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளுங் கூடியுறைப என்றதாம். |
தலைவியுந் தலைவனுந் தனித்தும் இருத்தலிற் பிரிந்துறையார் எனப் பன்மையாற் கூறினார்.1 |
1 தலைவன் தலைவியைப் பிரிதலின் தலைவி தனித்தும் பிரிந்த தலைவனும் தனித்தும் உறைதலின் அதாவது |