பக்கம் எண் :

கற்பியல் சூ.46283
 

அணுக   இராது    தொலைவில்    பிரிந்தோ    உறைதல்  இல்லை.  இவ்வரையறை  எப்போது எனின்
பரத்தையிற் பிரிந்த காலத்து என்க.
  

எனவே   அணிமையிலோ   தொலைவிலோ   பரத்தையிற்   பிரிந்த   தலைவன்  தலைவியின்  பூப்பு
உணர்த்தப்படின் பரத்தையின் நீங்கித் தலைவியிடம் உடன் உறைதல் வேண்டும் என்பது கூறியவாறு.
  

நச்சினார்க்கினியர்,  பூப்பின்  நீத்துப்  புறப்பாடு  ஈராறு  நாளும்  அகன்று உறையார் எனக் கூட்டியது
தேவையற்றது.
  

ஓதற் பிரிவுக்காலம்
   

186.

வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது. (47)  
 

பி.இ.நூ.
  

நம்பியகம் 89.
  

ஓதற் பிரிவுடைத் தொருமூன் றியாண்டே
  

இல.வி. 457.
  

நம்பியகச் சூத்திரமே.
  

இளம்.
  

இதுவும்மது.
  

இ-ள்:   விரும்பப்பட்ட  கல்விக்கட்  பிரியும்  காலம்  மூன்றியாண்டின்  மிகாது  என்றவாறு.  எனவே
ஓரியாண்டாயினும் ஈரியாண்டாயினும் ஆம் என்பது கொள்ளப்படும்.
  

நச்.
  

இஃது     ‘ஓதலுந்தூதும்’     (26)     என்னுஞ்     சூத்திரத்திற்     கூறிய    ஓதற்    பிரிவிற்குக்
காலவரையறையின்றென்பதூஉம் அவ்வோத்து இதுவென்பதூஉம் உணர்த்துகின்றது.
  

*இதன் பொருள்: கல்வி வேண்டியாண்டு இறவாது-துறவறத்தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி
வேண்டியயாண்டைக்   கடவாது,   மூன்று  இறவாது-அக்கல்வியெல்லாம்  மூன்று  பதத்தைக்  கடவாது
என்றவாறு.
  


* நச்சினார்க்கினியரின்  இவ்வுரை  வலிந்த  உரையாகும்  கற்பியலில்  இல்லறவொழுக்கம்  பற்றியன
கூறல்வேண்டு