பக்கம் எண் :

292தொல்காப்பியம் - உரைவளம்
 

திலே,  சிறந்தது  ஏமஞ்சான்ற   பயிற்றல்-அறம்   பொருளின்பத்திற்  சிறந்த    வீட்டின்பம்   பெறுதற்கு
ஏமஞ்சான்றவற்றை   அடிப்படுத்துதல்,   இறந்ததன்   பயனே-யான்    முற்கூறிய   இல்லறத்தின்   பயன்
என்றவாறு.
*
  

‘சான்ற    காமம்’  என்றார்  நுகர்ச்சியெல்லாம்  முடிந்தமை  தோன்ற.  இது   கடையாயினார்  நிற்கும்
நிலையென்று  உரைத்தற்குக்  ‘கடை’  என்றார்.  ஏமஞ் சான்றவாவன;  வானப்பிரத்தமுஞ்   சந்நியாசமும்;
எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே  நின்று  பின்னர்  மெய்யுணர்ந்து வீடு பெறுப என்றார்.
இவ்வீடு  பேற்றினை  இன்றியமையாது  இவ்வில்லறமென்பது இதன்  பயன். இது  காஞ்சியாகாதோவெனின்
ஆகாது  [தங்குறிப்பினானன்றி  நிலையாமை  தானே  வருவது  தான்  சிறந்து  நிலைபெற்று நிற்குமெனச்
சான்றோர்  கூறுதலும்  அது  தானே  வந்து  நிற்றலுங் காஞ்சி. இஃது  அன்னதன்றிச்  சிறந்த  வீட்டின்ப
வேட்கையால்  தாமே  எல்லாவற்றையும்  பற்றுறத்துறத்தலின்   அகப்   பொருட் பகுதியாம்].  இதனானே
இவ்வோத்தினுட்  பல  வழியுங் கூறிய  காமம்  நிலையின்மையின்மேல்  இன்பத்தை விளைத்தே வருதலிற்
காஞ்சியாகாமை யுணர்க.
  

உதாரணம்
  

“அரும்பெறற் கற்பினயிராணியன்ன
பெரும்பெயர்ப் பெண்டிரெனினும்-விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற் பாரின்மையே பேணு
நறுநுத லாணன்மைத் துணை
1.”
  

(நாலடி-381)
 

இதனுள்,  அருந்ததியைப்  போலுந்  (?)  தமக்குப்  பெரும்  பொருள்களை  நச்சுதலாலே   இரப்பாரது
வறுமையே விரும்பிப்
  


உண்டு  சென்றான் என்பது  ‘சென்றான்  உண்டு’  என எச்சம் மாறும். உண்ட சோறு என்பது ‘சோறு
உண்ட’ எனப் பெயரெச்சம் மாறாது.
  

* நச்சினார்க்கினியரின் இவ்வுரையும் விளக்கமும் வலிந்து கொள்ளப்பட்டன.
  

1 பொருள்  :   பெறுதற்கரிய   கற்பினையுடைய   இந்திராணி   போலும்   பெரிய   புகழுடைய
பெண்டிராய்இருந்தாலும்   அவருள்,   பொருளைப்   பெறும்   பெருவிருப்பத்தால்  தன்னை  இரந்து
பின்னிற்பவரின்   வறுமையை  விரும்பிக்  காக்கும்  (போக்கும்)  நன்னுதலாளே  கணவன்  அடையும்
நல்லதற்குத் துணையாவாள்.