என்றும், தெய்வத்தை வழிபடுவல் என்றும் எழுந்த காமம் கண்டாயன்றே?
மேன்மக்களானும் புகழப்பட்டு, மறுமைக்கும் உறுதி பயக்கும் ஆதலின், இக்
காமம் பெரிதும் உறுதியுடைத்து என்பது. உறுதி உடைத்தாமாறு:
அறுவகைப்பட்ட பாசாண்டி கரும் இணைவிழைச்சுத் தீதென்ப. அஃது
உண்டாமிடத்துச் சுற்றத்தொடர்ச்சி உண்டாம்; உண்டாகவே, கொலையே
களவே வெகுளியே செருக்கே மானமே என்று இத்தொடக்கத்துக் குற்றம்
நிகழும் என்பது. அதுகேட்கவே, தலையாயினார் அதன் கணின்று நீங்குவர்.
இனி, இடையாயினார், பெண் என்பது எற்புச் சட்டகம்,
முடைக்
குரம்பை, புழுப் பிண்டம், பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து;
ஐயும்
பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும்
மூத்திரபுரீடங்களும் என்று இவற்றது
இயைபு பொருளன்று; பொருளாயின்,
பூவே சாந்தே பாகே எண்ணெயே அணிகலனே என்றிவற்றாற்
புனையவேண்டா, தான் இயல்பாகவே நன்றாயின் என்று அதன் அசுபத்தன்மை
உரைப்பக் கேட்டு
நீங்குவர்.
கடையாயினார் 1எத்திறத்தானும் நீங்கார்; என்னை,
பல் பிறப்பிடை
ஆணும் பெண்ணுமாய்ப் பயின்று, போகந்துய்த்து வருகின்றமையின். அவர்க்கு
இது காட்டப்பட்டது. என்னை, ‘பேதையைக் காதல் காட்டிக் கைவிடுக்க’
என்பதனால் அவன் தாழ்ப்பட்ட
இணைவிழைச்சினுள்ளே மிக்கதொன்று
காட்டப்பட்டது. எஞ்ஞான்றும் மூப்புப் பிணிசாக்காடு இல்லது,
நிச்சநிரப்பு
இடும்பை இல்லது; இவனும் பதினாறாட்டைப் பிராயத்தானாய், இவளும்
பன்னீராட்டைப்
பிராயத்தாளாய், ஒத்த பண்பும், ஒத்த நலனும், ஒத்த அன்பும்,
ஒத்த செல்வமும், ஒத்த கல்வியும்
உடையாராய்ப், பிறிதொன்றிற்கு
ஊனமின்றிப் போகந்துய்ப்பர் என்று காட்டப்பட்டது என்பது.
என் போலவோ
எனின், கடுத் தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தீற்றியவாறு போலவும்,
கலங்கற்
சின்னீர் தெருளாமையான் உண்பானை, அறிவுடையான் ஒருவன்
பேய்த்தேரைக் காட்டி, ‘உதுக் காணாய்,
நல்லதொரு நீர் தோன்றுகின்றது,
அந்நீர் பருகாய், இச் சேற்று நீர் பருகி என் செய்தி!’
என்று கொண்டுபோய்
நன்னீர் காட்டி ஊட்டியது போலவும், தான் ஒழுகாநின்றதோர்
இணைவிழைச்சினுள்ளே
மிக்கதோர் ஒழுக்கங்காட்டினான். காட்டவே, கண்டு,
‘இது பெறுமாறு என்னை கொல்லோ?’ என்னும்;
எனவே, மக்கட்பாட்டினானும்
வலியா
(பாடம்) 1. எத்திறத்தாவது,
|