என்பது, பகற்குறிவந்து ஒழுகுந் தலைமகற்குத் தோழி
படைத்து
மொழிந்து வரைவுகடாயது. அவ்வகைத்தாற் களிற்றோடு ஒருபிடி
வேங்கைக்கீழ் நின்றபடி கண்டு, ‘இதுபோல் நம்பெருமானும் நமக்கு வழிபட
முடியுங்கொல்லோ’ என்றாள் என்பது.
இன்னும், ‘அன்னமரபிற் பிறவும்’ என்றதற்குச் செய்யுள்:
‘தொடுத்தான் மலரும்பைங் கோதைக்குத் தூதாய்த் துறைவனுக்கு
வடுத்தான் படாவணஞ் சொல்லுங்கொல் வானோர்க் கமிழ்தியற்றிக்
கொடுத்தான் குலமன்னன் கோட்டாற் றழித்துத்தென் னாடுதன்கைப்
படுத்தான் பராங்குசன் கன்னியங் கானற் பறவைகளே.’ (238)
இதுவும் அப் பொருட்கு ஏற்பச் சொல்லிக்கொள்க.
அஃதேயெனின், இச் சூத்திரத்துட் சொல்லப்பட்டன எல்லாம்
தலைமகட்கே யுரியனவும், தோழிக்கே யுரியனவும், தலைமகட்கும் தோழிக்கும்
உரியனவும் என மூன்று வகைப்படும்:
காமமிக்க கழிபடர் கிளவியும், தன்னுட்கையா றெய்திடு கிளவியும்
எல்லாம் தலைமகட்கே உரிய.
இரவினும் பகலினும் நீ வருக என்றலும், கிழவோன்றன்னை வாரல்
என்றலும் இவ்விரண்டும் தோழிக்கே உரிய.
ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவியும், காப்புச் சிறைமிக்க கையறு
கிளவியும் இருவருக்கும் உரிய.
உரிமையால் தம்மையழிந்த கிளவியெல்லாம் என்று பன்மையாற்
சொல்லாது ஒருமையாற் சொல்லியது எற்றிற்கோ எனின், தோழி தலைமகள்
என இருவரையும் வேறுபடுத்துக் கருதாது ஒருவராகவே கருதற்பொருட்டாக
ஒருமையாற் புணர்த்தார் என்பது.
(30)
சூத்திரம்-31
ஆறின் னாமையும் ஊறும் அச்சமும்
தன்னை அழிதலும் கிழவோற் கில்லை.
என்பது என்னுதலிற்றோ எனின், களவுகாலத்துத் தலைமகனது
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. மேற் சூத்திரத்தோடு இயைபு
என்னையோவெனின், மேற்சூத்திரத்துள் ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி
என்றாற்குத், தலைமகன்கண்ணும் ஆறுபார்த்துறவு உண்டென்று
கருதுவானாயிற் கருதற்க என்றற்குச் சொல்லப்பட்டது.
இதன் பொருள்: ஆறு இன்னாமையும் என்பது-ஆறு எனினும் வழி
யெனினும் ஒரு பொருட்கிளவி, வரும்வழி ஏற்றுடைத்து இழிவுடைத்து
இழுக்குடைத்து கல்லுடைத்து
|