பொருள் இரண்டு வகைப்படும்
அல்லதூஉம், உலகத்துப் பொருள்தான் இரண்டுவகையான்
உணர்த்தப்படும். உண்மைமாத்திரை உணர்த்திப் பிழம்பு
உணர்த்தப்படாதனவும், உண்மையும் பிழம்பும் உணர்த்தப்படுவனவும் என.
அவற்றுள், உண்மையுணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன
காமமும்
வெகுளியும் மயக்கமும் இன்பமும் துன்பமும் முதலாகவுடையன;
என்னை,
‘ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
கற்பும்
ஏரு மெழிலும் என்றா
சாயலு நாணு மடனும்
என்றா
நோயும் வேட்கையு
நுகர்வும் என்றாங்கு
நாட்டிய
மரபின் நெஞ்சுகொளி னல்லது
காட்ட லாகாப்
பொருள வென்ப’
(பொருளியல்-52)
என்றாராகலின்,
இனி, உண்மையும் பிழம்பும் உணர்த்தப்படுவன
மாடக்கூடல்
மாநிலத் தொடக்கத்தன என்று கொள்க. அன்பென்னும் பொருள் உண்மை
மாத்திரை யல்லது, பிழம்பு உணர்த்தப்படாது என்பது; என்றார்க்கு, அன்பு
என்பது தான் கருதப்பட்ட பொருளின்கண் தோன்றும் வேட்கையன்றே,
ஈண்டு நம்மால் அன்பு என்று விகற்பிக்கப்படாநின்றது. அஃது யாதோ
எனின், நாணுச் சுருங்க, புணர்வுவேட்கை பெருக, ஒருவனோடு ஒருத்தியிடை
நிகழும் அன்பு விசேட இலக்கணம் உரைத்து என்று கொள்க.
ஐந்திணை என்பன
அஃதேயெனின், அன்பு அறிந்தேன்; ஐந்திணை
யாவன
யாவையோ எனின், குறிஞ்சி நெய்தல் பாலை முல்லை மருதம் என இவை.
ஆயின், ஐந்திணை என்றதல்லது அவற்றது பெயரும் முறையும் இலக்கணமும்
அறியச் சொல்லிற்றிலரோ எனின், இது சுருக்கநூலாகலிற் சொல்லிற்றிலர்,
அவை முடிந்த நூலிற்கொண்டு உரைக்கப்படும். உரைக்குமிடத்து, முதல் கரு
உரிப்பொருள் என மூன்றுவகையான் உரைக்கப்படும்;
|