இவ்வெட்டு மணமும், ‘மன்றல் எட்டு’ என்று
சொல்லப்பட்டன என
வுணர்க.
இனிக்
கந்தருவ வழக்கம்
என்பது-கந்தருவர் என்பார் ஈண்டுச்
செய்த நல்வினைப் பயத்தால் ஒருவர் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி,
இருவரும் ஒரு பொழிலகத்து எதிர்ப்பட்டுப் புணர்வது; இது காந்தர்ப்பமணம்.
இதனை ஒப்பதனைக் களவு என்று வேண்டும் இவ்வாசிரியன்.
அஃதேயெனின், கந்தருவ வழக்கம்போல்வது என்னாது,
‘கந்தருவ
வழக்கம்’ என்றமையான், அதனைக் களவு என்று கொள்ளாமோ எனின்,
கொள்ளாம். நூற் கிடக்கை அவ்வியல்பிற்றன்று, ஆகலான், போல்வது
என்றே கொள்ளற்பாலது; போறல் என்பது சிறிது ஒத்துச் சிறிது ஒவ்வாது
ஒழிவது; என்னை, ‘குவளைப் பூப்போலுங் கண்’ என்றால், நீல மாத்திரை
ஒக்கும், மற்று ஒவ்வாப்புடை பெரிது; ‘பவளம்போலும் வாய்’ என்றால்,
செம்மை மாத்திரை ஒக்கும், மற்று ஒவ்வாப் புடை பெரிது. இங்கும்
ஏகதேசத்துப் புணர்தலும், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றிப் புணர்தலும்,
ஒத்த குலத்தினர் ஆகலும், ஒத்த அன்பினர் ஆகலும் என்னும்
இத்துணையே ஒப்பிக்கப்பட்டது; மற்றைப் புடையெல்லாம் ஒவ்வாது.
அஃதே எனின், ‘கந்தருவ வழக்கம் போல்வது’ என வேண்டாவோ
சூத்திரத்துள் எனின், வேண்டா; உவமம் தொகுத்தவாறு சொல்லுதும்,
பசுப்போல்வாளைப் பசு என்றலும், பாவைபோல்வாளைப் பாவை என்றலும்
என்பது.
அஃதேயெனின், அவை எட்டும், அதனையொத்த இதுவும் என,
மணம் ஒன்பதாகற்பால எனின், அதுவன்று; அவ்வெட்டும் உலகியலில்
உள்ளன; இஃது அன்னது அன்று; இல்லது இனியது நல்லது என்று புலவரால்
நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை உலக வழக்கத்தினோடு
இயையான் என்பது, அஃதேயெனின், இதனை முதனூல் என்று
புகுந்தமையாற், ‘கந்தருவ வழக்கம்’ என்றே மொழியற்பாற்று; ‘என்மனார்’
என்று சொல்லற்பாற்று அன்று; அது வழிநூல் வாய்பாடாகலான் என்பது
கடா. அதற்கு விடை, பிற நூலெல்லாம் ஆசிரியப் பகுதிப்படும், இதுவும்
அவையேபோல ஆசிரியப் பகுதிப் படுங்கொல்லோ எனின், படாது கந்தருவ
வழக்கம் போல்வது களவாதல் மூன்று காலத்துப் புலவர்க்கும் ஒப்ப
முடிந்தமையால், அவ்வகை சொன்னான் என்பது.
அஃதே யெனின், தன்னையொத்த புலவர் இல்லை யன்றே!
தான்
தலைவனாகலான், எல்லாம் உணர்ந்தா னாகலான் எனின்,
|