56இறையனார் அகப்பொருள்

 ‘மேவியொன் னாரைவெண் மாத்துவென் றான்கன்னி வீழ்துறைவாய்த்
 தேவியென் றாநின்னை யானினைக் கின்றது சேயரிபாங்
 காவிவென் றாயகண் ணாயல்லை யேலொன்று கட்டுரையாய்
 ஆவிசென் றாற்பெயர்ப் பாரினி யாரிவ் வகலிடத்தே
’        (45)

 ‘திரையுறை வார்புனற் சேவூர்ச் செருமன்னர் சீரழித்த
 உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதனொண் பூம்பொதியில்
 வரையுறை தெய்வமென் றேற்கல்லை யேனுன்றன் வாய்திறவாய்
 விரையுறை கோதை உயிர்செல்லின் யார்பிறர்மீட் பவரே
’.     (46)
 

                   மருங்கு அணைதல்

      என்றான் தலைமகனோ எனின், அல்லன்; தலைமகன் இடனாகப்
பிறந்த ஆற்றாமை. அதுவும் தலைமகன் எனவேண்டும். அச் சொற்
கேட்டலும், இறந்துபட்டான் எனக் கருதிக் கவன்று நோக்கினாள். நோக்கி,

உண்மை கண்டாள்; கண்டாட்குக் கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக்
கொண்டாற் போன்று பெரியதோர் உவகை ஆயிற்று; ஆக, அவ்வுவகை ஒரு
மூரல் முறுவல் தோற்றிற்று; தோற்ற, ‘எம்பெருமான் முன்னர்ப் பெரியதோர்

நாணின்மை செய்தேன்’ என ஆற்றாளாயினாள் ‘யான் முன் நிற்பவும்
ஆற்றானாயினான் எம்பெருமான்; எனது ஆற்றாமை கண்டவிடத்து
இறந்துபடும்பிற’ என ஆற்றாமை நீங்கும், நீங்க, நாண் வந்து அடையும்,
அடையவே, மறைவது காணாது, மாதுபடுநோக்கி நன்மணிக்காந்தள்
மெல்விரலாற் போதுபுரை நெடுங்கண் புதைத்தாள். புதைப்ப, ‘இனிச் சார
ஆற்றும்’ என நினைந்து, ‘நின் கருநெடுங்கண் புதைத்தது இவற்குப்
பெரியதோர் ஆற்றாமையைச் செய்யுமென்றாகாதே? அவற்றின் பரத்தனவோ,
சுரும்புடைக் கோதை, நின் கரும்புடைத்தோள்?’ என்னும்; அதற்குச்

செய்யுள்:


 
அரும்புடைத் தொங்கற்செங் கோலரி கேசரி கூடலன்ன
  சுரும்புடைக் கோதைநல் லாயிவற் குத்துயர் செய்யுமென்றுன்
  பெரும்புடைக் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குநின் பேரொளிசேர்
  கரும்புடைத் தோளுமன் றோவென துள்ளங் கலக்கினவே’  
(47)

  ‘தேந்தண் பொழிலணி சேவூர்த் திருந்தார் திறலழித்த
  வேந்தன் விசாரிதன் தெவ்வரைப் போல்மெலி விக்குமென்றுன்
  பூந்தடங் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குன் பொருவில்செங்கேழ்க்
  காந்தள் விரலுமன் றோஎம்மை உள்ளங் கலக்கினவே
’       (48)


     ‘சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்
     திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
     காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ
     கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்