6இறையனார் அகப்பொருள்

என இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும்,
தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும்
என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப.
அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக
முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்
கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது
கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக்
கடல்கொண்டது.


       இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும்,
சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றூர் கிழாரும்,
இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை
மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்
என
இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று
நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன
நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும்,
புற நானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும்,
எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும்
,
என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும்
என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது 1ஆயிரத்து எண்ணூற்று
ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார்
கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்
பெருவழுதி
ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார்
மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை

என்ப.
 
                   களவியலின் வரலாறு

        அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது.
செல்லவே, பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி, வம்மின், யான்
உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர்
நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை
2யுள்ளிவம்மின் என்றான். என, அரசனை விடுத்து எல்லாரும் போயின
பின்றைக், கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய
மழை பெய்தது. பெய்த பின்னர், அரசன், ‘இனி நாடு நாடாயிற்றாகலின்,
நூல்வல்லாரைக் கொணர்க’ என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க,
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்

     (பாடம்) 1. ஆயிரத்துத்தொளாயிரத்தைம்பது என்பாரும் உளர்.
            2. யுள்ளுமின்.