திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க்
கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த
ஒண்பொறி மஞ்ழை போல்வதோர்
கண்கவர் காரிகை பெறுதல்உண் டெனினே.’
எனக் கேட்டுத் தலைசாய்த்து நிலங்கிளையாநிற்பப் புணர்ச்சி
யுண்டென்று உணர்ந்துகொள்வாளாவது.
அல்லதூஉம், அங்ஙனம் வேறுபட்ட வேறுபாடு கண்டு ஐயுற்று
நின்றாள். அந்திவானகட்டுச் செங்கோட்டு
மதர்வைக் குழவித் திங்களைக்
கண்டு தான்தொழுது, ‘நீயும் தொழுதுகாண்’ என்னும். அதற்குச்
செய்யுள்:
பிறைதொழுகென்றல்
‘திருமால் அகலஞ்செஞ் சாந்தணிந் தன்னசெவ் வானகட்டுக்
கருமா மலர்க்கண்ணி கைதொழத் தோன்றிற்றுக்
காண்வந்தொன்னார்
செருமால் அரசுகச் செந்நிலத் தட்டதென் தீந்தமிழ்நர்
பெருமான் தனது குலமுதல் ஆய பிறைக்கொழுந்தே’ (68)
1‘முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் அத்திசையே
இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும்
பொருகளிமால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போற்
பெருகொளியான் மிக்க பிறை’
எனக் கேட்டுத் தலைமகள் தொழாது நிற்கும். கற்பழியும் என்பதனான்; அது
கண்டு புணர்ச்சியுண்மை
அறிந்துகொள்ளும் என்பது.
அஃதன்றி, அவளை வரையணங்காகவுஞ் சொல்லும்; அதற்குச்
செய்யுள்:
தகையணங்குறுத்தல்
‘மண்தான் நிறைந்த பெரும்புகழ் மாறன்மந் தாரமென்னும்
தண்தா ரவன்கொல்லித் தாழ்சுனை ஆடிய தானகன்றாள்
ஒண்தா மரைபோல் முகத்தவள் நின்னொ டுருவம் ஒக்கும்
வண்டார் குழலவள் வந்தால் இயங்கு வரையணங்கே.’ (69)
சுனைவியந்துரைத்தல்
‘ஆணெடுந் தானையை ஆற்றுக் குடிவென்ற கோன்பொதியில்
சேணெடுங் குன்றத் தருவிநின் சேவடி தோய்ந்ததில்லை
வாணெடுங் கண்ணுஞ் சிவப்பச்செவ் வாயும் விளர்ப்பவண்டார்
தாணெடும் போதவை சூட்டவற் றோஅத் தடஞ்சுனையே.’ (70)
இவை நாண நாடின.
1. தொல், பொருள், களவியல், சூ. 23 நச். உரை.
|