சொல்லும்; யாதோவெனின், இவ்விடம் என்னையரானுந் தன்னையரானும்
பல்காலும் புகுதரப்படுமால்;
அவர் நும்மைக் கண்டால் ஏதஞ்செய்வர்,
கூற்றினுங் கடுஞ்சினத்த ராகலான்; நீர் உடையதோர்
குறை உண்டேயெனின்,
அகன்று நின்று முடித்துக் கொள்ளற்பாற்று என்னும்; அதற்குச் செய்யுள்:
படைத்துமொழியான் மறுத்தல்
‘பொன்னயர் வேங்கையம் பூந்தழை ஏந்திப் புரிந்திலங்கு
மின்னயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்தொன்னார்
மன்னயர் வெய்தவை வேல்கொண்ட வேந்தன் மாந்தையன்னாள்
1தன்னயர் பல்கால் வருவர்நண் ணன்மின்இத் தண்புனத்தே.’ (113)
’பூட்டியல் மாநெடுந் தேர்மன்னர் பூலந்தைப் பூவழிய
ஓட்டிய திண்தேர் உசிதன் பொதியின் உயர்வரைவாய்
ஈட்டியர் நாயின 2வீளையர் வாளியர் எப்பொழுதும்
கோட்டிய வில்லர் குறவர்நண் ணன்மின்இக் கொய்புனத்தே.’ (114)
இது படைத்து மொழி கிளவி ஆயினவாறு என்னையோ எனில்,
பெரியார்களிடம் எனப்படுவன, பெண்பால்கட்கு
உரியவழி ஆண்பால்கள்
புகுதலும், ஆண்பால்கட்கு உரியவழிப் பெண்பால்கள் புகுதலுஞ்
செய்யப்படாதன.
அவற்றைச் செய்யப்பட்டனவாக இல்லது படைத்து
மொழிந்தமையாற் படைத்துமொழிகிளவியெனக்
கொள்க. அதுகேட்டு
ஆற்றானாம்; என்னை, ‘இவள் ஒருதிறத்தின் நீக்குதற்கு இவ்வாறு
சொல்லுகின்றாள்’ என ஆற்றானாயினான். அவ்வாற்றாமை
ஆற்றுவதொன்றனைப் பற்றும்; என்பற்றுமோ
எனின், ‘இவ்வகை என்கண்
ஏதத்திற்குக் கவல்வாள், யான் எய்தாதுவிடின் உளதாம் ஏதத்திற்குங்
கவலும்’
என ஆற்றுவானாம்.
குறிப்பு வேறு கொளலும் என்பது - தான் கூட்டம் வேண்டுங்
குறிப்பினளாயினுஞ் சொல்லுங் கூற்றும்
இன்றி வேண்டாத குறிப்பினளாய்க்
காட்டுவது; அதுகண்டும் ஆற்றானாம்; என்னை, ‘இவள் என்குறை
முடியாள்;
அவத்தமே வருந்துகின்றேன், இதுதானே ஆற்றுதற்குக் காரணம்; ‘பிறிது,
ஒன்றிற்குப்
புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன், புடைகவற்றியில்லா
நிலைமைக்கண் வந்தால் ஒரு
மறுமாற்றஞ் சொல்லும் பிற’ என
ஆற்றிப்பெயரும்; அஃதேயெனின், மேலனவும் எல்லாங்
குறிப்பு
வேறுகொளலே
யல்லவே? இதனையே குறிப்பு வேறுகொளல் எனச்
சொல்லியது
எற்றிற்கோவெனின்,
அவை யெல்லாஞ் சொன்னிகழ்ச்சியுடைய,
இது சொல்
நிகழ்ச்சியின்றிக் கூட்டம்
(பாடம்) 1. தன்னயர் தீயர்பல் கால்வருவாரிந்தத் தண்புனத்தே.
2. வீணையர்.
|