இறையனார் அகப்பொருள் - களவு 9
 

                 உரை நடந்து வந்த முறை

       மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார்
கீரங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர்க்கிழார்க்கு உரைத்தார்;
அவர் படியங்கொற்றனார்க்கு உரைத்தார்; அவர்
செல்வத்தாசிரியர்
பெருஞ்சுவனார்க்கு உரைத்தார்; அவர் மணலூராசிரியர் புளியங்காய்ப்
பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூராசிரியர் ஆண்டைப்
பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர்
திருக்குன்றத்தாசிரியர்க்கு
உரைத்தார்; அவர் மாதளவனார்
இளநாகனார்க்கு உரைத்தார்; அவர்
முசிறியாசிரியர்
நீலகண்டனார்க்கு உரைத்தார்; இங்ஙனம் வருகின்றது உரை.

       இனிப் பயன் என்பது, இது கற்க இன்னது பயக்கும் என்பது. இது
கற்க இன்னது பயக்கும் என்பது அறியேன், யான் நூற் பொருள் அறிவல்
என்னுமே யெனின், சில்லெழுத்தினான் இயன்ற பயனறியாதாய்,
பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் யாங்ஙனம் அறிதியோ எனப்படும்;
ஆகலின், இன்னது பயக்கும் என்பது அறியல்வேண்டும். என்பயக்குமோ இது
கற்க எனின்,
வீடுபேறு பயக்கும் என்பது. 

                 
களவு என்றதன் காரணம்

       என்னை, இது களவியலன்றே இது கற்க வீடுபேறு பயக்குமாறு
என்னை, களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ
சமயத்தாரானும் உலகத்தாரானும் கடியப்பட்டன. அவற்றுள் ஒன்றன்றாலோ
இஃது எனின், அற்றன்று. களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம்,
காமம் என்னுஞ் சொற்கேட்டுக் காமம் தீதென்பதூஉம் அன்று; மற்று அவை
நல்ல ஆமாறும் உண்டு; என்னை, ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து
நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து,
விலக்குவாரை இல்லாதபோழ்து உண்பல் என்று நின்றவிடத்து,
அருளுடையானொருவன் அதனைக் கண்டு, இவள் இதனை உண்டு சாவாமற்
கொண்டுபோய் உகுப்பல் என்று, அவளைக் காணாமே கொண்டுபோய்
உகுத்திட்டான்; அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள்;
அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக் களவினான் அவளை
உய்யக்கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இதுபோல்வன
களவாகா, நன்மை பயக்கும் என்பது.

        இனிக் காமம் நன்றாமாறும் உண்டு. சுவர்க்கத்தின்கண் சென்று
போகந்துய்ப்பல் என்றும், உத்தரகுருவின்கண் சென்று போகந்துய்ப்பல்
என்றும், நன்ஞானங் கற்று வீடுபெறுவல்