பக்கம் எண் :

கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றால்
பொலங்கழல் கான்மேற் புனைவு .

(இ - ள்.) வாட்பூசலில் எதிர்நின்று விலக்கிச் சுவர்க்கத்திடத்துச் செல்வார் யாவர்கொல்லோ? உறவல்லாதாரைப் போக்கிய சதங்கை அமைந்ததாளினையுடைய இளமைப்பருவத்து வேந்தன், மிக்கநெருப்பின் வாயிலே நஞ்சைத் தீற்றிய தன்மைத்து, பொன்னாற்செய்த வீரக் கழலைச் சேவடியின்மீது அணியுமது எ-று .

(7)

247. கற்காண்டல்

ஆனா வென்றி யமரில்வீழ்ந்தோற்குக்
கான நீளிடைக் கற்கண் டன்று.

(இ - ள்.) அமையாத வெற்றியையுடைய பூசலிற்பட்டோற்குக் காட்டில் நீண்டவிடத்துக் கல்லைக்கண்டது எ-று.

வ - று.1மிகையணங்கு மெய்ந்நிறீஇமீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டமைத்தார் கல்.

(இ - ள்.) மிக்க தெய்வத்தை உடம்பிலே நிறுத்தித்தலைமையினையுடைய வீரர் தூமமணி ஆர்ப்ப மலர்மழையைச்சிதறிச் சத்துருக்களை வருத்தும் சத்தத்தினையுடையகொடிய அம்பாலே வேறுபட்டு விண்ணிடத்துச் சென்றஇளமைப்பருவத்து வீரனுக்குப் பார்த்து நிச்சயித்தார், கல்லினை எ-று .

(8)

248. கற்கோணிலை

மண்மருளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கற்கொண்டன்று.

(இ - ள்.) பூமி மயங்கப் பறையொலிப்பச்சுவர்க்கத்திலே பொருந்தினவனுக்குக் கல்லினைக்கொண்டது எ-று.

வ - று.1பூவொடு நீர்தூவிப் பொங்க2விரைபுகைத்து
நாவுடை நன்மணி நன்கியம்ப - மேவார்
அழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல்.

(இ - ள்.) மலருடனே புனலைச் சிந்தி எழும்படியாக நறுநாற்ற முடையனவற்றைப் புகையப்பண்ணி நாவினாற் பொலிந்த அழகியமணி நன்றாக இசைப்ப, பொருந்தாதார் எரியுஞ்சினத்தைக் காலுவித்துப் பட்டவனுக்குத் தக்கது இதுவென்று துதித்துக் கழல்வீரர் கைக்கொண்டார் கல்லினை எ-று .

(9)

249. கன்னீர்ப் படுத்தல்

வண்டுசூழ் தாமம் புடையே யலம்வரக்
கண்டு கொண்ட கன்னீர்ப் படுத்தன்று.


1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சிலப். 5 : 14.