பக்கம் எண் :

244. ஏழகநிலை

ஏழக மூரினு மின்ன னென்றவன்
தாழ்வி லூக்கமொடு தகைபுகழ்ந் தன்று .

(இ - ள்.) ஏழகத்தகரினை மேற்கொண்டுசெலுத்தினும் இத்தன்மையனென்று அவனுடைய குற்றமில்லாதமனவெழுச்சியோடு மிகுதியைச் சொல்லியது எ-று .

(வ - று.) . எம்மனை யாமகிழ 4வேழகமேற்கொளினும்
தம்மதி 5றாழ்வீழ்த் திருக்குமே - தெம்முனையுள்
1மானொடு தோன்றி மறலுங்கா லேழகத்
தானொடு நேரா மரசு.

(இ - ள்.) எம்முடைய இல்லிடத்து யாங்கள்பிரியப்பட ஏழகத்தையேறினும் , தம்முடைய அரணிடத்துத்தாழ்கோத்திருக்கும் , பகைப்புலத்துக் குதிரைமிசையேதோற்றிப் போரைச் செய்யுங்காலத்துக்கிடாயின்மேல் அமைந்தானொடு செலவாம், அரசு எ-று.

(5)

245. இதுவுமது

ஏந்துபுக ழுலகி னிளமை நோக்கான்
வேந்து நிற்றலு மேழக நிலையே.

(இ - ள்.) உயருங் கீர்த்தியையுடைய ஞாலத்தின்இளமையைப் பாராதே அரசன் பூமிகாவல் பூண்டுநிற்பினும்ஏழகநிலையேயாம் எ-று.

வ - று. வேண்டார் பெரியர் விறல்வேலோன்றானிளையன்
பூண்டான் பொழில்காவ லென்றுரையாம் - ஈண்டு
மருளன்மின் 2கோள்கருது மால்வரை யாளிக்
குருளையுங் கொல்களிற்றின் கோடு .

(இ - ள்.) பகைவர் பெரியர், வென்றிவேலினையுடையோன்றான்இளமைப்பருவத்தோன், பூமிகாவலை மேற்கொண்டானென்றுசொல்லாம்; இவ்விடத்து மயங்காதே கொண்மின் ;கொள்கையைநினையும் பெரியமலையிடத்து யாளியின்குட்டியும் கொல்லும் யானையின் கொம்பை எ-று .

(6)

246. கழனிலை

அடுமுர ணகற்று மாளுகு ஞாட்பிற்
கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று.

(இ - ள்.) கொல்லும் மாறுபாட்டைப்பெருக்கும் வீரர்படும் பூசலிற் கடிய முரணையுடையவீரன் கழலைப் புனைந்தது எ-று .

வ - று.3வாளமரின் முன்விலக்கிவான்படர்வார் யார்கொலோ
கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் - காளை


1. "விரைசெலல் வெம்பரி மேழக மேற்றி" (சீவக. 521). 2. பொருந. 139-42; அகநா. 381 :1-3; சீவக.2554. 3. தொல். புறத். சூ. 5. இளம். மேற். (பி.ம்.)4. 'மேழகம்' 5. 'றாள்'