பக்கம் எண் :

அருங்கலை யுணர்ந்தோ ரவைபதி னான்கும்
கரந்தையுங் கரந்தைத் துறையு மென்ப.

என்-னின், கரந்தைத்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கரந்தை, கரந்தையரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்தொழிதல், ஆளெறிபிள்ளை, பிள்ளைத்தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியன்மலிபு, குடிநிலை என இவை பதினான்கும் கரந்தைத் திணையும் துறையுமாம் எ - று.

22. கரந்தை

மலைத்தெழுந்தோர் மறஞ்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று.

(இ - ள்.) மாறுபட்டெழுந்தார் மாற்சரியங் கெடக் கைப்பற்றின நிரையை மீட்டது எ - று.

வ - று.1அழுங்கனீர் வையகத் தாருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றாற் - செழுங்குடிகள்
தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கோடல்
நேரார்கைக் கொண்ட நிரை.

(இ - ள்.) ஆரவாரியாநின்ற கடல்சூழ்ந்த ஞாலத்துப் பெறுதற்கரிய உயிரைக் கூற்றுவன் உண்டபின்பு மீட்ட தன்மைத்து; வளப்பத்தினை யுடைய மறக்குடிகள் 4 கொப்புநிறைந்த கரந்தையைத் தலையிலேசூடித் தாங்கொள்ளுமது, பகைவர் கைப்பற்றின ஆனிரையை எ - று.

கோடல் வீடுகொண்டற்றென்க. ஆல் : அசை. தாம் கோடலைப் பொறாத வெட்சியார் கையினின்றும் கொள்ளப்பட்டன நிரை; இது வீடு கொண்டற்றென்றுமாம்.

(1)

23. கரந்தை யரவம்

2நிரைகோள் கேட்டுச் செய்தொழி லொழிய
5விரைவனர் குழூஉம் வகையுரைத் தன்று.

(இ - ள்.) பசுநிரையைக் கைப்பற்றினமை கேட்டுச் செய்யாநின்ற காரியம் தவிரக் கடுகினராகித் திரளுங் கூறுபாட்டைச் சொல்லியது எ- று.

(வ - று.)3காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப்பெயர்வு முண்டு.


1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. சீவக. 428, ந. மேற். 3. நன். சூ. 354, மயிலை. மேற். (பி-ம்) 4. 'கொத்து'
5.'விரையினர்', 'விரையுனர்'