பக்கம் எண் :

(இ - ள்.) கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடையாள் தலைவன் முன்னே சொல்லியது எ-று.

வ - று. எழுதெழின் மார்ப மெனக்குரித் தாகென்
றழுதழுது வைகலு மாற்றேன் - தொழுதிரப்பல்
வல்லிய மன்ன வயவேலோய் வாழ்கென
அல்லியந்தார் நல்க லறம்.

(இ - ள்.) சந்தன குங்குமச் சேற்றால் வரிக்கும் அழகினையுடைய அகலம் எனக்கே சேமமாக வேண்டுமென்று சொல்லி அழுதழுது நாடோறும் பொறேனாகிப் பணிந்து வேண்டிக்கொள்வேன்; புலியையொத்த வலிய வெற்றிவேலினையுடையோய், உயிர் வாழ்வாயாகவென எனக்கு நின் அல்லியினையுடைய மாலையைத் தருதல்காண் அறமாவது எ-று.

(1)

307. பின்னிலை முயறல்

முன்னிழந்த நலனசைஇப்
பின்னிலை 3மலைந்தன்று.

(இ - ள்.) தலைவி முன்பு தோற்ற தன் அழகை நச்சி இரந்து பின்னிற்றலை மேற்கொண்டது எ-று.

வ - று. மற்கொண்ட திண்டோண் மறவேனெடுந்தகை
தற்கண்டு 1மாமைத் தகையிழந்த - எற்காணப்
பெய்களி யானைப் பிணரெருத்திற் 2கண்டியான்
கைதொழுதேன் றான்கண் டிலன்.

(இ - ள்.) மற்றொழிலை மேற்கொண்ட திண்ணிய புயத்தினையும் சினவேலினையுமுடைய பெரிய மேம்பாட்டாளன் தன்னைக்கண்டு நிறத்தின் அழகையிழந்த என்னைக்காணச் சொரியும் மதத்தினையுடைய களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே கண்டு யான்கையைக் குவித்தேன்; தான் என்னைக் கண்டிலன் எ-று.

(2)

308. பிரிவிடை யாற்றல்

இறைவளை நெகிழ வின்னா திரங்கிப்
பிறைநுதன் மடந்தை பிரிவிடை யாற்றின்று.

(இ - ள்.) முன்கையில் தொடி சோர வெறுத்து வருந்தி இளமதி போன்ற நுதலினையுடைய மடவாள்தலைமகன் பிரிந்தவிடத்து ஆற்றியது எ-று.

வ - று. ஓடுக கோல்வளையு மூரு மலரறைக
தோடவிழ் தாழை துறைகமழக் - கோடுடையும்
பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொண் மான்மாலை
நீங்கானென் னெஞ்சகத்து ணின்று.


1. மாமை இழத்தல்: குறுந். 27. 4-5. 2. பு. வெ. 294: 3-4. (பி-ம்)3. 'மலிந்தன்று'.