| பரிபுரச் சீறடிப் பரத்தை கூறல் விறலி கேட்பத் தோழி கூறல் வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல் | 10 | பரத்தை வாயில் பாங்கிகண் டுரைத்தல் பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் குற்றிசை யேனைக் குறுங்கலி யுளப்பட ஒத்த பண்பி னொன்று தலையிட்ட ஈரெண் கிளவியும் பெருந்திணைப் பால. |
என்-னின், இதுவும் பெருந்திணைப்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செலவழுங்கல் முதலாகக் குறுங்கலியீறாகச்சொல்லப்பட்ட பதினேழும் பெருந்திணைப்பாலவாம் எ-று. அவற்றுள்:- 325. செலவழுங்கல் நிலவுவே னெடுந்தகை நீள்கழையாற்றிடைச் செலவுமுன் வலித்துச் செலவழுங் கின்று. (இ - ள்.) நிலவுபோல ஒளிவிடும் வேலினையும்பெரிய மேம்பாட்டினையுமுடையவன் உயர்ந்த மூங்கில் இயைந்த வழியிடைப் போவானாக முன்னே நிச்சயித்துப் போக்கு ஒழிந்தது எ-று. வ - று.1நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர்பூப்ப ஒடுங்கி யுயங்க லொழியக் - கடுங்கணை 2வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச் செல்லே மொழிக செலவு. (இ - ள்.) நடுக்கமுற்று, மணங்கமழும் நுதலினையுடையாள் மிக்க அழகு பீர்க்கம்பூப்போலப் பசப்ப மெலிந்து வருந்துதல் தவிரக் கொடிய அம்பினையுடைய வில்லை ஏருழவாகவுடைய வேடர்தம் முழையையுடைய உயர்ந்த பெரிய மலையிடத்துப்போகாம்; நெஞ்சே, தவிர்வாயாக போக்கை எ-று. (1) 326. மடலூர்தல் ஒன்றல்ல பலபாடி மன்றிடை மடலூர்ந்தன்று. (இ - ள்.) ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின்நடுவே மடன்மாவைச் செலுத்தியது எ-று. வ - று. இன்றிப் படரோ டியானுழப்பவைங்கணையான் வென்றிப் பதாகை யெடுத்தானாம் - மன்றில் தனிமடமா னோக்கி தகைநலம்பா ராட்டிக் குனிமடன்மாப் பண்ணிமேல் கொண்டு.
1. தொல். அகத். சூ. 54, இளம். மேற்.; 2. பு. வெ. 5, கொளு, குறள், 872. |