(இ - ள்.) பூமியுடனே இசையை நிறுத்தி ஆயுதம்பட்ட புண்ணுடனே வீரன்றான் வந்தது எ - று. வ - று.1வெங்குருதி மல்க 2விழுப்புண் ணுகுதொறூஉம் இங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்-பைங்கண் இனம்போக்கி நின்றா ரிகல்வாட்டி 3வேந்தன் மனம்போல வந்த மகன். (இ - ள்.) வெவ்விய உதிரம் மிக முகத்தினும் மார்பினும் பட்ட புண்ணினின்றும் விழவிழச் சாதிலிங்கஞ்சொரியும் வரையையொக்கும்; பைங் கண்ணினையுடைய பசுவினத்தை முன்னே செலுத்திநின்ற வெட்சியாருடைய மாறுபாட்டைக்கெடுத்து மன்னன்நெஞ்சினையொப்ப வந்த வீரன் எ - று. வீரன் இங்குலிகஞ் சோரும் வரையை யொக்குமென்க.வேந்தன் மனம் வெற்றியையே நினையும். (5) 27. போர்க்களத்தொழிதல் படைக்கோடா விறன்மறவரைக் கடைக்கொண்டு களத்தொழிந்தன்று. (இ - ள்.) பகைவராயுதத்திற்குப் புறங்கொடாத வெற்றியினையுடைய வீரரைக் கூட்டித் தான் பூசற்களரியிலே பட்டது எ - று. வ - று.4உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான் - புரைப்பின் றுளப்பட்ட வாயெல்லா மொள்வாள் கவரக் களப்பட்டான் றோன்றான் கரந்து. (இ - ள்.) சொல்லின் அஃது அதிசயமோ? பகைவர் கைப்பற்றின நிரையின்பின்னே பெரிய மேம்பாட்டினையுடையவன் சென்றான்; ஒப்பின்றிக் கருதப்பட்ட உடம்பிடமெல்லாம் ஒள்ளிய வாள் கொள்ளை கொள்ளப் போர்க்களரியிலே விழுந்தான், ஒளித்துத் தோற்றுகிலன் எ - று. 'நிரைப்பி னெடுந்தகை சென்றான் ' என்றது, இந்நாள்மீண்ட நிரையென்னும் புகழுடனே சென்றானென்றல். (6) 28. ஆளெறி பிள்ளை வருவாரை யெதிர்விலக்கி ஒருதானாகி யாளெறிந்தன்று. (இ - ள்.) பொருவாரை எதிரே விலக்கித் தானொருவனுமேயாகி வீரரை வெட்டியது எ - று. வ - று. பிள்ளை கடுப்பப் பிணம்பிறங்க வாளெறிந்து கொள்ளைகொ ளாயந் தலைக்கொண்டார் - எள்ளிப்
1. ஒப்பு : களவழி. 7; சீவக. 2239. 2. குறள். 776. 3. நன். சூ. 366, மயிலை. மேற். 4. தொல். புறத். சூ. 5, இளம். மேற். |