31. கையறுநிலை வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று. (இ - ள்.) அஞ்சத்தகும் வாட்பூசலிலே பட்டோனைப் பார்த்து யாழ்ப்பாணர் அவன் பட்டபடியைச் சொல்லியது. எ - று. வ - று.1நாப்புலவர் சொன்மாலை நண்ணார் படையுழக்கித் 2தாப்புலி யொப்பத் தலைக்கொண்டான் - பூப்புனையும் நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர் கற்கொலோ சோர்ந்திலவெங் கண். (இ - ள்.) செந்நாப் புலவருடைய 4கீர்த்திமாலை, பகைவர் சேனையைத் துகைத்து வலிய புலியையொப்பப் பட்டான்; பொற்றாமரைப் பூவைச் சூடும் நல்ல குலத்திலே பிறந்த அழகிய இசையினையுடைய யாழாற் சிறந்த பழைய அறிவினையுடையீர், "கல்லோ அறியோம் ,விழுந்தில எம்முடைய கண்கள். எ - று. (10) 32. நெடுமொழி கூறல் மன்மேம் பட்ட மதிக்குடை யோற்குத் தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று. (இ - ள்.) மன்னரின் மேம்பட்ட நிறைமதிபோலும் கொற்றக் குடையினையுடையோற்கு ஒருவீரன் தன்னுடைய மேம்பாட்டைத் தான் உயர்த்திச் சொல்லியது எ - று. வ - று.3ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக- நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப் பிழிமகி ழுண்பார் பிறர். (இ - ள்.) வீரராகிய போர்ப்பிரளயம் கைவளரின் அதனை விலக்கி வாளுடனே அங்கே தங்குவேனாக யான்; நாடோறும் மிக்க உவகையாற் சிறந்த வெற்றியினையும் வீரக்கழலினையுமுடைய வெய்யோனே, நீ கொடுப்ப நினைவு இயைந்து பிழியுமதுவை நுகர்வாராக, வேறு சிலர். எ - று. உண்பாராக, பிறரெனத் தொழிற்படச் சொல்லுக; யான் வாளொடு வைக, உண்பார் பிறரென்றுமாம். (11) 33. பிள்ளைப் பெயர்ச்சி போர்தாங்கிப் புள்விலங்கியோனைத் தார்வேந்தன் றலையளித்தன்று. (இ - ள்.) புள்ளைவிலக்கிப் பூசலைத்தாங்கினவனை மாலையினையுடைய மன்னன் தண்ணளி செய்தது எ - று.
1. மறையவர் சொன் மாலை" (பு-வெ.189.) 2. "தாப்புலி யனைய வெற்றிச் சராசந்தன்" (கூர்ம. கண்ணன்பூமி.70) 3. தொல். புறத். சூ. 5 ,இளம். மேற். 4.(பி-ம்.)'கீர்த்திமாலையைத் தலைக்கொண்டு பகைவர்' 5. 'பிழிமதுவு' |