பக்கம் எண் :

வ - று. பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயரா
தணங்கஞர்செய் தாளெறித னோக்கி - வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே
தலையளித்தான் றண்ணடையுந் தந்து.

(இ - ள்.) மாறுபடும் பூசலிடத்துக் காரியென்னும் புள் விலக்கவும் விலங்கானாய்ப் பகைவரை வருத்துந் துன்பத்தைச்செய்து வீரரைவெட்டுதலைப் பார்த்து வளையாத மலையினையொத்த தோளான் செற்றத்தினையுடைய வீரனுக்கு அற்றைநாளே வரிசைகொடுத்தான், மருதநிலம் பலவுங் கொடுத்து எ - று.

(12)

34. வேத்தியன் மலிபு

தோள்வலிய வயவேந்தனை
வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) தோளால்வலிய மறமன்னனை வாளால்வலிய வீரர் மேம்பாட்டினைச் சொல்லியது எ - று.

வ - று.1அங்கையு ணெல்லி யதன்பய மாதலாற்
கொங்கலர் தாரான் குடைநிழற்கீழ்த்- தங்கிச்
செயிர்வழங்கும் வாளமருட் சென்றடையார் வேல்வாய்
உயிர்வழங்கும் வாழ்க்கை யுறும்.

(இ - ள்.) உள்ளங்கை நெல்லிப்பழத்தினது தன்மையாதலால் தேன் மலருமாலையினையுடையான் கொற்றக்குடை நிழலின்கீழே அவதரித்துக் 5குற்றத்தினைக் கொடுக்கும் வாட்பூசலிலேபுக்குப் பகைவர் தம் வேலின் வாயிலிலே உயிரைக்கொடுக்குஞ் செல்வம், மிகவும் உறுதியுடைத்து. எ - று.

வாழ்க்கை, நெல்லியதன்பயமாதலால் உறுதியுடைத்தென்க எ - று.

(13)

35. குடி நிலை

2மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும்
கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று.

(இ - ள்.) மண்செறிந்த பூமியிடத்துப் பழமையும், தறுகண்மையுமுட் கொண்டு பிறரறியும் குடியின் வரலாற்றினைச் சொல்லியது எ - று.

மண்டிணிஞாலம் : மண்ணுலகு விண்ணுலகென்றாற்போலக் கொள்க.

வ - று. பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
3வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
4கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி.


1. தொல். புறத். சூ. 5, இளம்; நன். சூ. 221, மயிலை. விரு. மேற். 2. புறநா. 2 : 1; சிலப். 26 : 42; மணி. 11 : 95. 3. பரி, 6 : 3. 4. மதுரைக். 4. 5. ' (பி.ம்.)குரோதத்தினைக் '