வ - று.1வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற வாடன் முதியாள் வயிற்றிடம் - கூடார் பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா இரும்புலி சேர்ந்த விடம். (இ - ள்.) முத்தியினை அறிந்து எல்லாப் பற்றுமற்றோர்க்கும் அற்புதமாம், இவ்விடத்துநின்ற பொலிவழிந்த தன்மையையுடைய கிழவிதன் மடியகம்; பகைவர் அளவிறந்த சேனை நெருக்கிவந்து மேலிடவும் நின்ற நிலையினின்று நீங்காத பெரிய புலியனையான் கிடந்த இடம் எ - று. ஆல்: அசை; ஒரு சொல்விழுக்காடாயினுமாம். (19) 55. 2தழிஞ்சி 3அழிகுநர் 4புறக்கொடை யயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று. (இ - ள்.) ஒருவீரன் தனக்குக் கெட்டோடுவார்8முதுகுபுறத்துக் கூரிய வாளோச்சாத மிக்க மறப்பண்பை விரும்பிச்சொல்லியது எ - று. வ - று. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும் தான்படை தீண்டாத் தறுகண்ணன் - 5வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் 9எண்ணியபின் போக்குமோ வெஃகு. (இ - ள்.) காட்டிலே தோற்றின நெருப்புப்போலப் பகைவர் தன்னை மீதுர்ந்துவந்தாலும் ஆயுதந்தொடாத மறவன்றான், பகைவர் சுவர்க்கலோகத்தே போதலைக்கருதி எதிரினல்லது அவ்வெகுண்டோர் முதுகிடுதல் கருதிய பின்பு ஓக்குவனோ வாளினை ? எ - று. (20) 56. பாசறைநிலை மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும் 6பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று. (இ - ள்.) நிறைமதிபோன்ற கொற்றக்குடையின்கீழே தாழ்வு சொல்லி வேந்தர்பலரும் மாற்சரியத்தைவிடவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மறத்தினையுடைய மன்னன் பாடிவீட்டிலே இருந்தது எ - று. வ - று.7கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய்திறந்த பின்னும் - சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான்.
1. புறநா. 86 : 4-5. 2. குறள். 772-3, பரிமேல் . தழிச்சுதல் தழிஞ்சி யென்பர்; தொல். புறத். சூ. 8, ந. 3. குறள். 776, பரிமேல் . 4. அகநா. 4 : 5; புறநா. 8 : 7. 5. பு. வெ. 47. 6. பதிற். 15 : 1. 7. நான்மணி. 11. 8. (பி.ம்.) 'முதுகுப்புறத்து' 9. 'எண்ணியபினோக்குமோ' |