பக்கம் எண் :

4. காஞ்சிப்படலம்

வ - று.1கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை செய்யுள்
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் [ அவ்வேலே ]
அம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் அடிகள்
கொம்பிற்கு மாயிற்றே கூற்று.

(இ - ள்.) ஆரவாரத்தான் மிக்க கடல்சூழ்ந்த நிலத்திற் கொடிதே காண், ஒருமையுடைமை; வெய்தான அயில்வாயிலே பட்டான் வெற்றியை விரும்பினோன்; அந்த அயிலே பகழிபோல மிளிரும் பெரிய விழியை உடையவளான அவன்அன்பினையுடைய வஞ்சிக்கொம்பனையாளுக்கும் கூற்றாயிற்று எ - று.

(23)

84. மகட்பாற் காஞ்சி

ஏந்திழையாட் டருகென்னும்
வேந்தனொடு வேறுநின்றன்று.

(இ - ள்.) அழகிய ஆபரணத்தினையுடையாளை எனக்குத் தருக வென்று சொல்லும் அரசனோடு மாறுபட்டு நின்றது எ - று.

(வ - று.) அளிய கழல் 3 வேந்த ரம்மா வரிவை
2எளியளென் றெள்ளி யுரைப்பிற் - குளியாவோ
பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போற் பகழி கடிது.

(இ - ள்.) அளியினையுடையகழன் 4 மன்னர் அழகிய திருவை யனைய மடவாள் தாம் கொள்கைககு எளியளென்று இகழ்ந்துபேசின், தையாவோ ? பண்ணையொத்த வார்த்தையினையுடைய இப்பலதொடியினை யுடையவள் ஒளியினையுடைய வதனத்தவாகிய கண்போன்ற அம்பு, கடிதாக எ - று.

85. முனைகடி முன்னிருப்பு

மன்னர் யாரையு மறங்காற்றி
முன்னிருந்த முனைகடிந்தன்று.

(இ - ள்.) வேந்தரெல்லாரையும் சினத்தைக் காலப் பண்ணி5. அவரை முன்னேயிருந்த பூசற்களரியினின்றும் போக்கியது எ - று.

(வ - று.)கடிகமழ் வேரிக் கடைதோறுஞ் செல்லக்
கொடிமலி கொல்களி றேவித் - 6 துடிமகிழ
ஆர்த்திட் டமரு ளடையாரை யம்முனையிற்
பேர்த்திட்டான் பெய்கழலி னான்.

(இ - ள்.) மிகநாறும் மதுவினையுடைய மாற்றார் அரணத்தின் வாயிலிடந்தோறும் போக வெற்றிக்கொடியால் மிக்க யானைகளையேவித் துடி கொட்ட ஆரவாரித்துப் போருட் பகைவரைச் செருப்புலத்தினின்றும் போகத் துரந்தான், இட்டவீரக்கழலினையுடையான் எ - று.

(25)

காஞ்சித்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு இருபத்து நான்கும் முடிந்தன.

நான்காவது காஞ்சிப்படலம் முற்றிற்று.


1. தொல். மொழி. சூ. 24, ந.; மேற்படி புறத். சூ. 19, இளம். மேற்; ' கவ்வை நீர் ' : நன். சூ. 458, மயிலை. மேற். 2. நன். சூ. 451, மயிலை . மேற். (பி-ம்)3. ' வேந்தன் ' 4. 'மன்னன் ' 5.' பகைவரை ' 6. ' துடியுகள.