6. உழிஞைப்படலம் 95. உழிஞை முடிமிசை யுழிஞை சூடி யொன்னார் கொடிநுடங் காரெயில் கொளக்கரு தின்று. (இ - ள்.) தம் முடிமேலே உழிஞைமாலையை அணிந்து பகைவர்கொடியசையும் நிறைந்த குறும்பினைக் கைப்பற்ற நினைந்தது எ - று. வ - று. உழிஞை முடிபுனைந் தொன்னாப்போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக்-கழி1 மகிழ் வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே கொய்தார மார்பினெங் கோ. (இ - ள்.) உழிஞைமாலையை முடிமேலே சூடிப் பொருந்தாத போரினைச்செய்யும் 2வேந்தர் சீரிய புரிசையை வெல்லும் யானை குத்த மிக்ககளிப்புமேவாத பெரியோரும் மகிழ்ச்சியைமேவிக் கீர்த்திகூறும் பெரும்புகழினையுடையவன், மட்டஞ் செய்த மாலையாற் சிறந்த மார்பினையுடைய எம் வேந்து எ - று. அம்மென்றது, சாரியை. (1) 96. குடைநாட்கோள் செற்றடையார் மதில்கருதிக் கொற்றவேந்தன் குடைநாட்கொண்டன்று. (இ - ள்.) செறுத்துக் கூடாதாருடைய அரணைக்கொள்ள நினைந்து வெற்றி மன்னவன் குடையைப் புறவீடுவிட்டது எ - று. வ - று.3நெய்யணிக செவ்வே னெடுந்தேர் நிலைபுகுக கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக-வையகத்து முற்றக் கடியரண மெல்லா முரணவிந்த கொற்றக் குடைநாட் கொள. (இ - ள்.) நெய்யிட்டு அலங்கரிப்பனவாக, பகைவர் குருதியாடிச் சிவந்தவேல்கள்; நெடிய தேர்களும் நிற்குங்கூடங்களிலே நிற்பனவாக; கொய்த தலையாட்டத்தினையுடைய குதிரையும் கொல்லும் யானையும்போர்க்குச் செய்த பண்ணினைக் களைக; ஞாலத்து அடையக் காவற்குறும்புகளெல்லாம் தத்தம் மாறுபாடு கெட்டன, வெற்றிக்குடையைப் புறவீடுவிட எ - று. (2) 97. வாணாட்கோள் கலந்தடையார் மதில்கருதி வலந்தருவா ணாட்கொண்டன்று. (இ - ள்.) கூடிச் சேராதார்தம் அரணினைக் கோடலை நினைந்துவெற்றிகொள்ளும் வாளைப் புறவீடுவிட்டது எ - று.
1. தொல். புறத். சூ. 11 ,இளம்.மேற். (பி.ம்.)2. 'மகிழ்பு' 3. 'வேந்தர்தஞ்சீரிய' |