பக்கம் எண் :

(இ - ள்.) தன் ஏவலைச் செய்யாத வீரர் கெட மாறுபாட்டைக் கடந்து தோட்டியையும் களிற்றையும் கைப்பற்றினான் குதிரைத் தொழிலைவல்லவன்; கச்சினையுடைய ஒள்ளிய வாள்வீரர் பணிந்து வாழ்த்த பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து ஏவல் எ - று. - எவை வல்லவென்றுமாம்.

(24)

119. வேற்றுப்படை வரவு

மொய்திகழ் வேலோன் முற்றுவிட் டகலப்
பெய்தார் மார்பிற் பிறன்வர வுரைத்தன்று.

(இ - ள்.) போர்மிகும் வேலோன் சூழ்தல்விட்டுப் போக இட்ட மாலைமார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைச் சொல்லியது எ - று.

வ - று. உவனின் றுறுதுயர முய்யாமை நோக்கி
அவனென் றுலகேத்து மாண்மை - இவனன்றி
மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம்
முற்றியார் முற்று விட.

(இ - ள்.) உவன் இற்றைநாளிலே பொருந்தும் விதனத்தினின்றும் ஒழியாமையைப் பார்த்து அப்படிக் கொத்தவனென்று சொல்லி உயர்ந்தோர் புகழும் ஆண்மைத்தன்மையினையுடைய இவனல்லது மற்று யாவர் இது செய்யவல்லார்! மேகம் உறங்கும் நீண்ட மதிலைச் சூழப்போனார் வளைவு விட எ - று.

(25)

120. உழுது வித்திடுதல்

எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித்
துண்ணா வரகொடு கொள்வித் தின்று.

(இ - ள்.) பகைவருடைய பலஅரணும் கழுதையாகிய ஏரிட்டுழுது கவடியுடன் குடைவேலை விதைத்தது. எ - று.

வ - று. எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
1கழுதையேர் கையொளிர்வேல் கோலா-உழுததற்பின்
வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
கள்விரவு தாரான் கதம்.

(இ - ள்.) 2சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது அதற்குப் பின்பு கவடியும் குடைவேலும் வித்தினும் கெடாதால்; தேன் கலந்த மாலையினையுடையவன் கோபம் எ - று.

(26)

121. வாண்மண்ணுநிலை

புண்ணிய நீரிற் புரையோ ரேத்த
மண்ணிய வாளின் மறங்கிளந் தன்று.


1. தொல், புறத் . சூ.13, ந; புறநா. 15:2-3, 392: 9-11: சிலப் 27: 55-6; காஞ்சிப் . நாடு. 28 2. "மாடக்குச் சித்திரமும்" (பழையசெய்யுள்.)