(இ - ள்.) உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்தநீராலே மஞ்சனமாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லியது. எ - று. வ - று.1தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் கூர்த்தவாண் மண்ணிக் கொடித்தேரான்-பேர்த்தும் 2இடியார் பணைதுவைப்ப விம்மதிலுள் வேட்டான் புடையா ரறையப் புகழ். (இ - ள்.) 1தீர்த்தநீரும் மலரும் சொரிந்து திக்குவிளங்கக் கூரிய வாளினை மஞ்சனமாட்டிப் பதாகையாற் சிறந்த தேரினையுடையான் இரண்டாவதும் உருமேற்றையொக்கும் வீரமுரசு ஆர்ப்ப இந்த அரணிடத்தே களவேள்வி வேட்டான், பக்கத்துள்ள மன்னரெல்லாம் தன் கீர்த்தியைச் சொல்ல எ - று. (27) 122. மண்ணுமங்கலம் 3வணங்காதார் மதிற்குமரியொடு மணங்கூடிய மலிபுரைத்தன்று. (இ - ள்.) பணியாதார் அரணாகிய கன்னியுடன் வதுவைபொருந்திய மிகுதியைச் சொல்லியது எ - று. வ - று.1எங்கண் மலர வெயிற்குமரி கூடிய மங்கல நாள்யா மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி. (இ - ள்.) எம்முடைய கண் மலர அரணாகிய கன்னியினை மணந்த மணநாளிலே யாம் மகிழ்ச்சியெய்த மதுவலரும் கோவைமாலையினையும் கையாற்செய்யப்பட்டு ஒளிசிறந்த ஆபரணத்தினையுமுடைய வேந்தன் தாள் நிழற்கீழேதங்கின; செறிந்த சோதியால் நிறைந்த அணிகலத்தையுடைய அரசர் முடிகள் எ - று. (28) 123. மகட்பாலிகல் மயிற்சாயன் மகள்வேண்டிய கயிற்கழலோ னிலையுரைத்தன்று. (இ - ள்.) மயில்போன்ற மென்மையினையுடைய மகளை வேண்டிய மூட்டுவாயாற் சிறந்த வீரக்கழலினையுடையான் முறைமையைச் சொல்லியது எ - று. வ - று. அந்தழை யல்குலு மாடமை மென்றோளும் பைந்தளிர் மேனியும் பாராட்டித்-தந்தை புறமதில் வைகும் புலம்பே தருமே மறமதின் மன்னன் மகள்.
1. தொல் . புறத். சூ.11, இளம். மேற். 2. முருகு. 121; குறுந். 270: 1-3; பரி. 4: 19, 22: 4; அகநா. 188: 1-3, 354: 2; புறநா. 350: 4; சீவக. 2900. 3. பு.-வெ. 107. |