பக்கம் எண் :

9. பாடாண்படலம்

அமரர்கண் முடியு மறுவகை யாகிய
கொடிநிலை கந்தழி வள்ளி குணஞ்சால்
புலவரை யவர்வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல்
புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர்ப் 3பணிதல்
25நிகழ்ந்த காமப் பகுதியுட் டோன்றிய
கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும்
நற்றுனி நவின்ற பாடாண் பாட்டும்
கடவுட் பக்கத்து மேனோர் பக்கத்தும்
மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும்
30மாதர் மகிழ்ந்த குழவியு மூரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியொ
டாங்க வாறெண் பகுதிப் பொருளும்
பாங்குற வுரைப்பது பாடாண் பாட்டே.

என்-னின், பாடாண்பகுதியாமாறுஉணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பாடாண்பாட்டு முதலாகக் காமப்பகுதியீறாகச் சொல்லப் பட்ட நாற்பத்தெட்டும்பாடாண்டிணையும் துறைகளுமாம் எ-று.

அவற்றுள்:-

189. பாடாண் பாட்டு

1ஒளியு மாற்றலு மோம்பாவீகையும்
அளியு மென்றிவை யாய்ந்துரைத் தன்று.

(இ - ள்.) இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும்தண்ணளியும் என்று சொல்லுமிவற்றைத் தெரிந்து சொல்லியது எ-று.

(வ - று.)2மன்னர் மடங்கன் மறையவர்சொன்மாலை
அன்ன நடையினார்க் காரமுதம்- துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேற் றானையெங் கோ.

(இ - ள்.) அரசர்பலர்க்கும் சிங்கம், அந்தணர்க்குப்புகழ்மாலை, அன்னம்போன்ற செலவினையுடைய மகளிர்க்குநிறைந்த அமிர்தம், செறியும் இரவலர்க்கு மழை,குளிர்ந்த பூவாற்செய்த செவ்விமாலையினையும்அழலும் சினவேற் சேனையினையுமுடைய எம்முடைய அரசன் எ-று.

(1)

190. வாயினிலை

புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை
கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று.

(இ - ள்.) அரசனுடைய நெடிய வாயிலைக் கிட்டிய என்வரவினை மறைவின்றிச் சொல்லென வாயில்காவலனுக்குச்சொல்லியது. எ-று.


1. ஒளி: குறள். 390, 556, 698; புறநா. 51, 309; சீவக. 248; மணி. 29:128. 2. நன் .சூ. 409, மயிலை. மேற். மாறன்.ப. 192, மேற். (பி-ம்)3. 'பரவல்'