210. மணமங்கலம் இகலடுதோ ளெறிவேன் மன்னன் மகளிரொடு மணந்த மங்கலங் கூறின்று. (இ - ள்.) பகையைக் கொல்லும்புயத்தினையும் எறியும் வேலினையுமுடைய வேந்தன் அரிவையரோடுபுணர்ந்த நன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) அணக்கருந் தானையா னல்லியந்தார்தோய்ந்தோள் மணக்கோல மங்கலம்யாம் பாட - வணக்கருஞ்சீர் ஆரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட் கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி. (இ - ள்.) பகைவரான் வருத்துதற்கரிய சேனையினையுடையான்றன் அல்லிமாலையை மணந்தாள், வதுவையணிப்பொலிவை யாங்கள் புகழ; தாழப்பண்ணுதற்கரிய மதிப்பினையும் நிறைந்த அரணினையுமுடைய வேந்தன்றன் பேதையாகிய அழகிய மூங்கில்போன்ற தோளினையும் கூரிய பல்லினையும் சிவந்த வாயினையுமுடைய காமவல்லியனையாள் எ-று.(22) 211. பொலிவுமங்கலம் வேல்வேந்த னுண்மகிழப் பாலன் பிறப்பப் பலர்புகழ்ந் தன்று. (இ - ள்.) வேலினையுடைய மன்னன் மனமுவப்பப் புதல்வன் பிறத்தலாற் பலரும் கொண்டாடியது எ-று. (வ - று.) கருங்கழல் வெண்குடைக் காவலற்குச்செவ்வாய்ப் பெருங்கட் புதல்வன் பிறப்பப் - பெரும்பெயர் விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினார் எண்ணா ரவிந்தா ரிகல். (இ - ள்.) வலியவீரக்கழலினையும் தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்குச் சிவந்த வாயினையும் பெரிய கண்ணினைமுயுடைய மைந்தன் பிறத்தலாற் பெரிய நாமத்தினையுடைய தேவர்கள் மகிழ்ந்தார்; அகன்ற பூமியிலுள்ளார் வாழ்த்தினார்; பகைவர் மாறுபாடொழிந்தார். எ-று (23) 212. நாண்மங்கலம் அறந்தரு செங்கோ லருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத் தன்று. (இ - ள்.) தருமத்தினையுண்டாக்கும் செங்கோலினையும்அருளினையும் விரும்பியோன் பிறந்தநாளின் 1நன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிநாட்பெற்றார் விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பிமிர்தார்.
(பி-ம்) 1. ' தன்மையை ' |