வேண்டியிக்குறட்பயனாராய்வது நன்றேயெனவிப்பதிகத்துரிய தெய்வவணக்கமுஞ்சொல்லக் குறித்தபொருளைத் தொகையாயுரைத்ததுந் தெளிவாயிரு பிரிவாக வகுத்ததுங் கேட்பதற்கிணக்க மாவதற் கவையடக்கமு மாசையாவதற் கப்பொருண்மாட்சியு மருமையும் பயனு முறையே வந்தவாறுகாண்க. இசைத்தமிழ்ப் பதிகத் துதாரணமாகக் கம்பருரைத்த பதிகமுப்பாப் பாயிரத்தைக்காண்க. அவற்றுண் முதற்பாத் தெய்வவணக்கமும் பின்னிருபாவுஞ் செய்பொருளுரைத்தலும், பின்னாற்பாவினோ டவையடக்கமு, மற்றவை தன்கதை மாட்சியு மருமையும் பயனும் வந்ததறிக. எ-று. (3) |
இரண்டாவது:- காரணம். 2. Cause. |
150. | காரண வழியெனக் காட்டுரைப் பொருட்குரி யகத்திணை புறத்திணை யாமிரு வகைத்தே. | |
(இ-ள்.) நிறுத்தமுறையானே காரணவழியா மாறுணர்த்துதும். ஈண்டுக்காரண மென்னுஞ் சொல்லாலுரைப் பானெடுத்த பொருளைக்காட்டற்கு தவு நியாயங்களே வருவன வெனவு மந்நியாயங்கடோன்று மிடனேதிணை யெனவுங்கொள்க. இவையே யகத்திணை யென்றும் புறத்திணை யென்றும் இருவகைப்படும். இவற்றையினித் தனித்தனி விளக்குதும். எ-று. (1) |
151. | அகத்திணை யியல்பே யறைபடும் வகையே பொதுச்சிறப் புவமை புறநிலை யெதிர்நிலை கருவி காரியங் காரக முன்னவை பின்னவை யெனவாம் பிரிவீ ராறே. | |
(இ-ள்.) நிறுத்தமுறையானே யகத்திணையாமாறுணர்த்துதும். அவையே யியல்புமுதலாகப்பின்னவையீறாகப் பன்னிரண்டெனப்படும். எ-று. (2) |
152. | அவற்றுள், இயல்புரைத் தொப்ப வியம்புத லியல்பே. | |
(இ-ள்.) நிறுத்தமுறையானே யியல்பெனு முதலகத்திணையாமாறுணர்த்துதும். ஆகையிலவ்வவ் வியல்பினைக்கொண்டு பொருளைக்காட்ட லியல்பகத்திணை யெனப்படும். அங்ஙன நல்லறிவில்லா ரீனரென்றுகாட்ட வுணவுமுடையு மைம்புலநுகர்ச்சியு மற்றவுயிர்க்கும் பொதுமையவாகி நல்லறி வொன்றே மாந்தரியல்பின் சிறப்பென்றமையா லறிவில்லாதார் மக்களெனப்படா விளங்கினோ டனையரெனப் படுவரென்ப தியல்பெனு மகத்திணையாகும். - சிந்தாமணி. - "பெண்ணெனப்படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா, வுண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகு, மெண்ணிப் பதங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே, |