வெண்ணெய்க் குன்றெரி யுற்றாற் போன்மெலிந்து பினிற்கு மன்றே." என்றாராகையின் மாதரதியல் பினைக் காட்டி மாதரை நம்பலாகா தென்பது காட்டினதாயிற்று. எ-று. (2) | 153. | தொகைவிரித் துரைத்தல் சொற்பொருள் வகையே. | | (இ-ள்.) வகையகத்திணையா மாறுணர்த்துதும். தொகையா யுரைத்த பொருளை வகையறுத்தியம்புதல் வகையகத்திணையாம். (உ-ம்.) வந்திளை வேனிலுலாவிய வனமெலா மகிழ்ந்ததெனத் தொகைப் பொருளா யுரைத்ததை வகையறுத் துரைப்பம். "விரைவாய் நாகம் விருப்புறி நகைப்பன, முகைவாய்த் தாழை முறுவிக் கமழ்வன, நறைவாய்ப் பன்மலர் நயனம் விழிப்பன, மதுவாய் வண்டின மகிழ்ந்தியா ழொலிப்பன, தீங்குரற் குயிலினஞ் சென்றுபா விசைப்பன, வேனைப் பறவை யினப்பறை துவைப்பன, வெறிவாய் விரியிளை வேனில், செறிவாய் வனத்துட் செருக்கி யுலாவவே." எ-து. வகையகத் திணையாம். அங்ஙனம் வனத்திற் கிராமர் போகையி லயோத் திமாநக ரெல்லாம் வருந்தின தென்ப வகையறுத் துரைப்ப மனிதர் புலம்பலுரைத்ததின் பின்னர்க்கம்பர் சொன்னதாவது:- "கொடியடங்கின மனைக்குன்றங் கோமுர, சிடியடங்கின முழக்கிழந்த பல்லியம், படியடங்கலு நிமிர்பசுங்கண் மாரியாற், பொடியடங்கின மதிற்புறத்து வீதியே, அட்டிலு மிழந்தனபுகை யகிற்புகை, நெட்டிலு மிழந்தனநிறைந்த பால்கிளி, வட்டிலு மிழந்தன மகளிர் கான்மணித், தொட்டிலு மிழந்தன மகவுஞ் சோரவே. ஒளிதுறந்தன முகமுயிர் துறந்தெனத், துளிதுறந்தன முகிற்றொகையுந் தூயநீர்த், தளிதுறந்தன பரிதான யானையுங், களிதுறந்தன மலர்க் கள்ளுண் வண்டினே." பலவுமிராமாயண நகர்நீங்குபடலத் திருநூற்றிரண் டாம்பாவே தொடங்கிக்காண்க. எ-று. (4) | 154. | பொதுவெனப் பலவை யடக்கு மொன்றே சிறப்பென வொன்றி னடங்கும் பலவே. | | (இ-ள்.) பொது வகத்திணையுஞ் சிறப்பகத்திணையு மாமாறுணர்த்துதும். ஆகையிற்றனக் குறுப்பெனப் பலவற்றை யடக்கிக் கொள்வது பொதுவெனவு மொன்றினடங்கின பலவற்றுட் டனித்தனி யொவ்வொன்று சிறப்பெனவுங்கொள்க. இவ்வா றருடைய தானம் பொறை தவ மூக்கமுத லியவெல்லாம் பொதுப்படவறமே யாகையிலறம் பொதுவெனவுமற்றவைத் தனித்தனிச் சிறப்பெனவும்படும். பிறவுமன்ன. ஆகையிற் றயையைப்புகழப் பொதுப்பட வறத்தின் மாட்சியைக் காட்டிப் புகழ்வது பொதுவகத்திணையாம். கல்விபுகழ்ந்துழி திருவள்ளுவர் முதலியகற்றோர் மாட்சியைப் புகழ்வது சிறப்பகத்திணையாம். பிறவுமன்ன. (உ-ம்.) - சிந்தாமணி. - "தேவரே தாமுமாகித் தேவராற் றெழிக்கப் பட்டு, மேவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிதமர் பணிகள்செய்து, நோவது பெரிதுந் துன்ப நோயினுட் பிறத்தறுன்பம், |
|
|