(உ-ம்.) "பிறர் கடுஞ்சொலின்னா னிந்நாள் பொறுத்தது கண்டு நீயும் பொறாயோ." என்பதொப்புப் புறநிலை. 'அடிப்பாரை பொறுத்தன ரொருசொல்லா லிடிப்பாரை பொறார்கொல்லோ.' என்பதிழிவுபுறநிலை. 'நக்களவர் நயன்கொண்ட நாட்டுநலநாடியபின், மக்களவர் மேனலங் கொள்வானுலக நாடாமோ.' என்பதாக்கப் புறநிலை. பிறவுமன்ன. எ-று. (7) |
157. | குறித்தவை காட்ட மறுத்தவை காட்டி யெதிரில் விளக்க லெதிர்நிலை யென்ப. | |
(இ-ள்.) எதிர்நிலை யகத்திணையா மாறுணர்த்துதும். ஒன்றனை விளக்க வதனை மறுத் தெதிரே நிற்கும் பொருளைக்காட்ட லெதிர்நிலை யகத்திணை யெனப்படும். அங்ஙன நல்லோரது மேன்மை தோன்றத் தீயோரதீனத்தைக் காட்டலுங் கல்லாமையால் வருமகிழ்ச்சி தோன்றக் கல்விப் பயக்கும் புகழ்ச்சிகாட்டலு மெதிர்நிலை யகத்திணையாம். (உ-ம்.) தேம்பாவணி. "கான்சுரக்கு மிளமுல்லைநட்டுப் பொன்னாற் கடைகோலி, வான்சுரக்கும் பனிமாலைப் பந்தர் முத்த மணற்பாய்த்தித், தேன்சுரக்கு நீரூட்டி வளர்த்த பூங்காத் தீய்ந்தறவோ, மீன்சுரக்கு மிராவொளித்துப் போதீர் நம்மைவிட்டென்பார்." இதனு ளொட்டெனு மலங்கார வகையாற் சூசைமாமுனி யெகீத்து நாட்டி னீங்கலின்வந்த கேடுதோன்ற வன்னானாங் கிருந்துணர்த்தியதனால் வந்த நன்மை காட்டியவாறு காண்க. - இருமொழிமாலை.- "கார்முகத்து முல்லை கதிர் முகத்துத் தாமரையே, சீர்முகத்துஞ் சிந்தாப் பொறையினிதே - போர்முகத்து, வில்லெதிரே தோல்வையினு மிக்கின்னா மெல்லியலார், சொல்லெதிரே தோலாநிலை." இதனின் மகளிரோ டெதிர்த் திகலி நின்றா ரிகழ்ச்சி தோன்றப் போர்முகத்து நில்லா தோடின சேவகனி கழ்ச்சி காட்டப்பட்டது. எ-று. (8) |
158. | காரண நான்குங் காரிய நான்கும் விரித்துத் தன்பொருள் விளக்க லுரித்தே. | |
(இ-ள்.) கருவியகத்திணையுங் காரியவகத்திணையுமாமாறுணர்த்தும். கருவியெனினுங் காரணமெனினு மொக்கு மாகையினொன்றற்குள்ள காரணத்தைக்கொண்டாயினு மதனாலாகுங் காரியத்தைக் கொண்டாயின மதனைவிளக்கிக்கூறல் கருவியகத்திணையுங் காரியவகத்திணையுமாமெனக்கொள்க. இவற்று ளாக்கினா னென்னுங்கருத்தாக் காரணமு முதற்காரணமுந் துணைக்காரணமுங் குறிப்புக்காரணமுமாகக் காரணவகை நான்கென்ப. அங்ஙனங் கடவுளுரைத்த நூலிஃதாகையிற் பொய்யும் பிழையுமில்லதே என்பது ஆக்கினொனெனுங் காரணவகத்திணை; மண்ணாலாய வுடலிஃதா கையி னிற்பதரிதே - இது முதற்காரண வகத்திணை; ஐம்பொறி யுணர்ந்துந் தன்மை யறிவுளோர் நம்பா ரென்றான் - இது துணைக்காரண வகத்திணை; பேருலகாள யான்பிறந்ததாயபின், பாருலகிழி நலம்பற்றிநக்கவோ - |