முன்பனிபின்பனி, சீரிளைவேனில் வேனிலென்றாங், கிருமூன்று திறத்தது தெரிபெரும்பொழுதே." இவைமேற்கோள். எ-று. (1) | 167. | கார்க்காலத் துரிமை கார்க்கா லுருட்டிய வாடையே கோப மயிலே கேகயங் கோடல் செங்காந்தள் கொன்றை கூதாளந் தண்டிமி லுயவை தளவு கடம்பஞ்சனி வெண்குருந் தலர்தலே வியங்கங் கிளிகுயி னீங்கலே நீர்மல ரேங்க லென்ப. | | (இ-ள்.) கார்ப்பருவத்துரிமையா மாறுணர்த்துதும். வாடைவீசலும்; இந்திரகோபமு மயிலுங்கேகயப்புள்ளுந் தோன்றிமகிழ்தலும்; வெண்காந் தள், செங்காந்தள், கொன்றை, கூதாளம், வேங்கைமரம் காக்கணஞ்செடி, முல்லை, கடம்பு, காயா, குருந்தென விவையேமலர்தலும்; அன்னங் கிளிகுயிலகன்று வருதலும்; தாமரைமுதனீர்மலரே யொளித்தலும்; கார் ப்பருவத்துரிமை யெனப்படும். எ-று. (2) | 168. | கூதிர்க் குரிமை கூதிரே குருகே வோதிமங் குரண்ட மொண்மதிச் சகோர முதுவளை ஞண்டூ ருநத்து வத்த னீரே தெளித னீர்மீன் சனித்தல் காரே சூற்கொளல் பாரிசா தஞ்சந் தாரம் பித்திகை மந்தார நாணன் முற்றலர்ந் துவத்தலே மற்றுயிர் நைதலே. | | (இ-ள்.) கூதிர்ப்பருவத் துரிமையா மாறுணர்த்துதும். கூதிர்க்காற்று வீசலும், குருகு மன்னமுங் கொக்குஞ் சகோரப்புள்ளுஞ் சங்கு நண்டு நத்தையுமென விவை மகிழ்தலும், நீரே தெளிதலும், மீனினஞ் சனித்தலும், மேகஞ் சூற்கொள்ளலும், பாரிசாதஞ் சந்தனஞ் சிறுசெண்பகஞ் செம்பரத்தை நாணலென விவை மலர்தலும், ஈண்டுக் கூறிய வுயிரே யன்றி மற்றைப் பறவை விலங்கு மக்களொருங்குடன் வருந்தலும், கூதிர்ப் பருவத் துரிமை யெனப்படும். எ-று. (3) | 169. | முன்பனிக் குரிமை துன்பனிக் கடறருங் கொண்டல் வீசலுங் கூண்டசை சிதகன் மண்டிருட் கூகைகூன் மனமகிழ்ந் தொலித்தலு மாந்தருச் சாமந்த மலர்தலு மிலந்தை தீங்கனி யுதிர்தலுந் தீயெனக் குன்றி காய்த்தலு நெல்லொடு கரும்பு முற்றலுமாம். | |
|
|