மொழிமுதலிடத்துக் குறுகும். (உ-ம்) ஒளவியம், கௌவை எ-ம். வரும். சூத்திரம். 'அளபெடைதனியிரண் டல்வழி ஐஒள, வுளதாமொன்றரை தனிமையுமாகும்" எ-ம். கூறினார். ஐகார ஒளகாரக்குறுக்கமும் ஒவ்வொன்றே யாயினும் இடவகையால் ஐகாரக்குறுக்கமூன்றும் ஒளகாரக்குறுக்க மொன்றுமாம். ஐகாரம் ஒளகாரம் இடஞ்சார்ந்து தன்மாத்திரையிற்குறுகி ஒலித்தலின் காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின்வேறாய் ஐகார ஒளகாரக் குறுக்கமெனப் பெயராய்ச் சார்பெழுத்தி னொன்றாயின, எ-று. (13) | | 17. | மகரம் ல ளக்கீழ் வம்மேற் குறுகும். | | | (இ-ள்.) மகரக்குறுக்கமாமாறுணர்த்துதும். இனிச்சொல்லும்படி லளத்திரிந்து னணவாகியபின் மகரம் வரி னதுகுறுகும். (உ-ம்) போலும், மருளும், என்பதற்கு போன்ம், மருண்ம், என்பதாம். என்னெனில், அம்மகரங்கான்மாத்திரையாகக் குறுகிநிற்கும். (உ-ம்) "சிதையுங் கலத்தைப்பயினாற் றிரிந்துந்திசையறியுமீகானும்போன்ம்." எ-ம். "வெயிலியல் வெஞ்சுரமையநீ யெய்தின், மயிலியன்மாதுமருண்ம்." எ-ம். அன்றியு மகரவீற்றுமொழி யின்கீழ். வகரம்வரின் மகரங்குறுகும். (உ-ம்) மரம்வளர்ந்தது, கமலம்விரிந்தது. எ-ம். வரும். மகரக்குறுக்கமொன்றே யாயினும் இடைவகையான் மூன்றாகும். இடமும் பற்றுக் கோடுஞ்சார்ந்து மகரந் தன்மாத்திரையிற் குறுகி ஒலித்தலின் காரணத்தால் முதலெழுத்தி னொலிவடிவின் வேறாய் மகரக் குறுக்கமெனப் பெயராய்ச் சார்பெழுத்தினொன்றாயின, எ-று. (14) | | 18. | உயிர்நெடி லினக்குறி லுற்றள பெடுக்கு மொற்றள பெழும்வே றுற்றுக்குறிற்கீ ழியைந்து ர ழ வொழியிடை மெலியாய்தம். | | | (இ-ள்.) அளபெடையாமாறுணர்த்துதும். அதுஉயிரளபெடை ஒற்றளபெடை யென விருவகைப்படும். அவற்றுள் உயிரளபெடையாவது, ஓசையுமளவும் பெறுவதுவேண்டி மொழியின்முதலே யிடையே கடையேநின்ற நெட்டெழுத் தெல்லா நீளப்பெறு மப்பொழு தொவ்வொன்றற் கினமாகிய குற்றெழுத்து வந்த அளபிற்குக்குறியாகநிற்கும். இவ்வாறு நெட்டெழுத்தேழு மளபெடுக்கும். அப்போததற் கதற்கினமாவன. ஆ அவ்வும், ஈ இவ்வும், ஊ உவ்வும், ஏ எவ்வும், ஐ இவ்வும், ஓ ஒவ்வும், ஒள உவ்வும், எனவினமாகும். (உ-ம்) ஆஅ - ஈஇ - ஊஉ - ஏஎ - ஐஇ - ஓஒ - ஒளஉ என மொழி முதலினும், படா அகை - பரீஇகம் - கொடூஉரம் - பரேஎகம் - கடைஇயம் - புரோ ஒசை - அனௌஉகம் என மொழிக்கிடையினும், கனாஅ - குரீஇ - மரூஉ விலேஎ - அசைஇ - அரோஒ என மொழிக்கடையினும் உயிர் அளபெடுத்துவந்தன. இவைசெய்யுட்கண்வருவன. அவைவருமாறு. (உ-ம்.) "ஓஒதல் |
|
|