181. | இடனெனப் படுவது மலைநா டியாறே. | |
(இ-ள்.) மற்றொரு வகுப்பிட வுரிமையாமாறுணர்த்துதும். மேற்கூறிய வைந்திணை வகுப்பன்றி மலையு நாடும் யாறுமென மற்றொரு மூவகைப்படு மிடமெனக்கொள்க. இவற்றுட் பொதியமு மிமயமு முதலிய மலைகளே மலையும், மகதமுதற் பதினெண்பாடை நிலங்களே நாடும், கங்கை பொருநை காவிரி முதலிய யாறுகளே யாறுமெனக்கொள்க. இவற்று ளொன்றன் பொருண் மற்றொன்றி னுளவாகச் சொல்லாததற் கதற்குரிய வற்றைத் தந்துரைப்ப துரிமையெனப்படும். இவ்வாறன்றிப் பொன்மலைச் சந்தன மெனவுந் தென்மலை மதகரியெனவும் பொதியிற் குரியன பொன்மலைக்கண் ணுளவாகவும், பொன்மலைக்குரியன பொதியின்கண் ணுளவாகவு முரைப்பின் மலையெனு மிடவழுவாமெனக்கொள்க. பிறவுமன்ன. அங்ஙன மொவ்வொரு மலைநாடி யாறுகட்கு முரிமையைத் தமிழ்நூலிடத்துக்காண்க. ஆயினு மொன்றனைப் புகழுமிடத் திவ்வுரிமைமாறி யில்லனவு முளவெனப் புனைந்துரையாகச் சொல்லினும் வழுவென் றிகழா தலங்கார மென்று கொள்பவர் முற்றறி வுடையோ ரெனக் கண்டுணர்க - தண்டியலங்காரம். - "இடமெனப் படுவது மலைநாடியாறே" எ-து மேற்கோள். எ-று. (8) |
பண்புரிமை. Nature. |
182. | பண்பெனச் சாதியும் பற்றலு மளவையும் வண்ணமும் பலவும் வகுத்தனர் புலவர். | |
(இ-ள்.) நிறுத்த முறையானே பண்புரிமையா மாறுணர்த்துதும். ஈண்டுப் பண்பெனுஞ் சொல்லா லவனவன் பிறந்த சாதியு நெஞ்சிற் பற்றிய பற்றுதலு நால்வகை யளவு மைவகை வண்ணமு மறுவகைச் சுவையு மெழுவகை யிசையு மெண்வகையூறு முதலிய பலவும் வரப்பெறும். இவற்றை யினித் தனித்தனி விளக்குதும். எ-று. |
சாதித்தொழிலுரிமை. Caste Employment. |
183. | வன்னியர் மன்னர் வணிகர் சூத்திர ரென்னிவர் நால்வர்க் கியல்வன வுரைக்கி லோதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கு மல்லாத கல்வி யெல்லார்க்கு முரித்தே. | |