(இ-ள்.) நிறுத்தமுறையானே சாதியுரிமையாமாறுணர்த்துதும். ஆகையில் அந்தண ரரசர் வணிகர் சூத்திரரென விந்நாட்டில் வழங்கு முயர்சாதியிற் பிறந்த நால்வராகி மற்றவ ரிழிந்தோரெனப் படுவரென் றுணர்க. இந்நாட்டு வழக்கம்பற்றி யவ்வவச் சாதிக்குரிய தொழிலை விளக்குதும். ஆகையி னாவினாற் கற்குந்தொழிலுள் வேதத்தை யோதியுணர்த லந்தண ரரசர் வணிகரென மூவர்க்கு முரித்தே யொழிய சூத்திரர்க்குத் தகாதெனவும், வேதநூலொழித்தொழிந்தகல்வியாவையு முணர்த னால்வர்க்கு முரித்தெனவுங் கூறுவாரெனக்கொள்க. ஆயினும் வாயாலுணப்படு முடற்குணா யார்க்கும் பொதுமைய வாகையிற் காதாலுணப்படு முயிர்க் குணவாகிய மெய்ம்மறையோதல் சிலர்க்கு விலகல் கொடுமையன்றோ. மீளவு மறையே பரகதி வழியைக்காட்டுவ தாகையில் அனைவரும் பொதுப்பட வக்கதிக் குரியராகப் பிறந்த பின்ன ரவ்வழி யுணர்தல் பொதுமைத் தன்றென விதிப்பது நிறையோ. ஆகையில். வெண்பா. - "பூரியர்க் கோதன்மின் பொய்யா மறையென்பா, ராரியராய்த் தாங்கண் டறியாரோ - பேரலையு, மொய்மணலார் கானகமு முட்கடமு நீர்மல்கப், பெய்முகில் வான்பின்றாச் சிறப்பு" - "கற்றொத் தொழுகார்க்குக் காசறுத்த வேதநூல், சொற்றற்க வென்பார்க்குத் தோன்றாரே - பற்றற்ற, காவியு நீலமுநீவிக்கதிர்க்கையான், மேவியவிண்வேந்தனன்பு." என்றார்மெய்ம்மறை யாசாரியனார். - இலக்கணவிளக்கம். - "ஓதற்றொழிலுரித்துயர்ந்தோர்மூவர்க்கும்" - "அல்லாக் கல்வி யெல்லார்க்கு முரித்தே." இவைமேற்கோள். எ-று. (1) |
184. | படைக்கலம் பயிறலும் பகடாதி யூர்தலு முடைத்தொழில் பின்மூவர்க் குரைத்திசி னோரே. | |
(இ-ள்.) இதுவுமது. படைக் கலங்களை வீசி யெறிந்தே யதெஃகிச் செய்தொழிற் கற்றலும் யானையுங் குதிரையுந் தேரு மேறி யூர்தலுமாக நாவினாற் கற்குந் தொழி லல்லாத தொழில்க ளந்தணரொழித் தொழிந்த மூவர்க்கு முரிய வென்பார். - இலக்கணவிளக்கம். - "படைக்கலம் பயிறலும் பகடு பிறவூர்தலு, முடைத் தொழி லவர்க்கென வுரைத்திசினோரே." எ-து. மேற்கோள். எ-று. (2) |
185. | அறப்புறங் காவ லனைவர்க்கு முரித்தாய் மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே. | |
(இ-ள்.) இதுவுமது. அறப்புறங் காவலென்றும், நாடுகாவலென்றும், காவ லிருவகைப்படும். இவற்று ளறப்புறங் காவலே நால்வர்க்கும் பொதுமைத்தாகி நாடுகாவ லரசர்க் குரித்தெனக்கொள்க. - இலக்கண விளக்கம். - "அவற்றுள், அப்புறங் காவ லனைவர்க்கு முரித்தே" - "மற்றைக் காவல் கொற்றவர்க் குரித்தே." இவை மேற்கோள். எ-று. (3) |
186. | வேதமாந்தர் வேந்த ரென்றிரு வர்க்குந் தூது போதற் றொழிலுரித் தாகும். | |