வடிவுமுதலியவுரிமை. Form &c. |
189. | வடிவள வூறு மற்றவை பொதுமை கடியச் சிறப்பிற் காட்ட லுரிமை. | |
(இ-ள்.) வடிவு முதற் குணவுரிமையா மாறுணர்த்துதும். சதுர முதற் பலவடிவு மெண்முத லளவும் வெம்மைமுத லெண்ணூறு முதலிய குணங்களு ளொன்றற் குரியன மற்றொன்றற் குரியவாகத் தோன்ற வுரைப்பது குண வழுவாகும். பற்பல பொருட்குப் பொதுப்பட நிற்குங் குணங்களைச் சொல்லினும் வழுவன் றாயினும் பொதுப்படா ததற் குரியவைச் சொல்லுதல் சிறப்பாகிக் குண வுரிமையா மெனக் கொள்க. அங்ஙனம் பைந்தினை யென்பது பைங்கூழுக் கெல்லாம் பொதுக்குணமாம். செறிகுரற் றினை யெனவுந் தாற்றுக் கதிர் வரகெனவுஞ் சிறப்புடைக் குண வுரிமையாம். பிறவுமன்ன. இவ்வகை யுரிமையே தன்மை யலங்கார மெனவும்படு மாதலா லணியதிகாரத் துள்ளுங் காண்க. எ-று. |
ஒழுக்கவுரிமை. Conduct. |
190. | ஒழுக்க மென்பதீண் டுலக முறையே. | |
(இ-ள்.) நிறுத்த முறையானே யொழுக்க வுரிமையா மாறுணர்த்துதும். தம்மு ளொவ்வா முறைகளைத் தோற்றா தோற்ற முறைகொண் டுலக வியற்கை பிறழா துரைப்ப தொழுக்க வுரிமை யெனப்படும். (உ-ம்.) வெண்பா. - ``அலைகடல்க ளேழுதூர்த் தந்தரத்தி னூடே, மலையனைய மால்யானை யோட்டிக் - கலவரை, நீறாக்கி வையநெடுங் குடையின்கீழ் வைத்தான், மாறாச்சீர் மானித்தார் மன்.ழுழு என்ப திதனுளொரு நிலவேந்தனை யெழுகடலைத் தூர்த்தா னெனவு மாகாயத்தில் யானையோட்டிப் பகைவரை வென்றா னெனவும் வந்தமையா லுலகிலொழுகா முறையா யொழுக்க வழுவாயிற்று. பிறவுமன்ன. எ-று. |
சொல்லுரிமை. Speech. |
191. | சொல்லெனப் படுவ தன்றொகுதி நான்கவற்றுட் சனுக்கிரகஞ் சங்கதந் தேவர் மொழியே யவப்பிரஞ் சனமொழி யாமிழி சனர்க்கே வொவ்வொரு நாட்டிடை யுரைப்பது பாகத | |