(இ-ள்.) தற்பவமொழிக்குச் சிறப்புவிதியை யுணர்த்துதும். தேசிகச் சொல்லொடு வடமொழியிற்றிரிந்த தற்பவச்சொல் லொன்றிரண்டுங்கலந்து வந்த செய்யுள் கேட்போர்க் கின்பமாக வழங்கு முறுப்புச் செய்யு ளெனப்படும். (உ-ம்.) கட்டளைக்கலித்துறை. - "கருணாம்பரியாய்ப் பாவாதிவினையிருட்கங்குலற, வருணாம்பரியாக வந்துதித்தாளேயனைத்துயிரா, ரிருணாம்பரிதருஞ் சீலத்துவான் கதியெய்தவிவ, டெருணாம்பரிதாஞ்சரணாம்புயஞ் சென்னி சேர்த்துகவே." - வெண்பா. - தராதரத்தொப்பத்தராதலத்தோங்கி, வரா தரத்தந்தரத்தில்வாழ்ப, - பராகச், சிரசரணாகத்திரவிதிங்கண் மீன்பூண்டாள், கரசரணாதிதொழிற்கண்டு,' எ-ம். பிறவுமன்ன. எ-று. (2) | 193. | கொங்கண மகதங் கோசலந் துளுவஞ் சிங்களஞ் சீனஞ் சிந்து திராவடம் வங்கஞ் சாவக மராடங் கலிங்க மங்கஞ் சோனக மருணங் கவுசலம் பப்பரங் காம்போசம் படைமூ வாறனுண் மருவூரின் மேற்குங் கருவூரின் கிழக்கு மருதை யாற்றின் றெற்கும் வைகை யாற்றின் வடக்குஞ் செந்தமிழ் நிலனே பாண்டிகுட்டம் பன்றி கற்கா வெண்குடம் பூழி மலாடு சீதம் புன்னா டருவா வருவா வடதலை யெனச்செந் தமிழ்சூழ் பன்னிரு நாடே. | | (இ-ள்.) இங்ஙனம் வழங்குநா டிவையென வுணர்த்துதும். அவ்வவ நாட்டுப் பாடைமொழியைத் தேசிகமென்று மேற்கூறின வதனா லிங்ஙனம் பாடை வேற்றுமைப் பற்றி வேறுவேறாக வழங்குநாடுகள் கொங்கண முதலாகக் காம்போச மீறாகச் சொல்லப்பட்ட மூவாறுமென் றுணர்க. உலகில் வழங்கு மெண்ணிறந்த பாடையு நாடுகளு முளவென்றாயினுங் குறுகிய தமிழ்நாட் டெல்லையுள் ளறியப்பட்ட பாடை யிவையே. ஆகையி லிங்ஙனம் வழங்குந் தேசங்களைம்பத்தாறென்பன வாயினு மவற்றுள் வழங்கும் பாடைகள் பதினெட்டென்ப. ஆகையி லிவற்றுளொழிந்த அவந்தி, கௌடம், காம் பிலி, குகுதம், மச்சம், குரு, கேகயம், தவத்தவம், பாஞ்சாலம், காந்தாரம், மாளவம், நிடதம், குடகம் தெலுங்கம், கன்னடம், கொல்லம், கலிங்கம், பல்லவ மென விவைபலவு முன்சொன்ன பதினெட்டுள்ளு மடங்குமெனக் கொள்க. அன்றியு மவற்றுட்டிராவடமொன்று தமிழ்நாடாகும். தமிழுமிரு வகைத்தாகிப் பதின்மூன்று குறுநிலத் துளடங்கிச் செந்தமி ழென்றொரு நிலத்திலும், கொடுந்தமி ழென்றொரு பன்னிரு நிலத்திலும் வழங்கும். அவற்றி னெல்லையும் சூத்திரத்திற் காண்க. |
|
|