கேளாயுடன் வருவதில்." என வந்தவாறு காண்க. சொல்ப வனுணர்ந்த குறிப்பினாலறிய வருமொழி குறிப்பிற் குறிப்புச் சொல்லெனப்படும். (உ-ம்.) குறள். - "கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து." என்ப திதன்பொருளிடந் தெரிதலெனு மதிகாரப்பெயரா லறிய வந்தது. ஆகையி லினிவருங் குறிப்பெஞ்சணியு மொட்டலங்காரமு மிவ்வகைக் குறிப்புமொழியால் வழங்குமென்றுணர்க. அவையேமுன்னும் பின்னும் வரும்பொருளாற்றோன்ற வுரைப்பது நெறியே. அன்றியுஞ் சூத்தி ரத்துட் பிறவுமென்ற மிகையால் பலபொருள்குறித்த திரிசொல்லுங் குறிப் புச்சொல்லெனவுமாம். அவற்றுள் சில மிகவரிதுணர்மொழிகளாகையி லவற்றை விளக்கவொரு பெயரெச்சமாயினு மடைமொழியாயினுங் கூட்டியுரைப்பிற் பொதுமை நீங்கி யொன்றற் குரியனவாகத் தோன்றுமென் றுணர்க. அங்ஙன நாக மென்னுந் திரிசொல்லே கைந்நாகம், பைந்நாகம், பெய்ந்நாக மென்புழி, கூட்டிய வோரடை மொழியாற் பலவற்றிற்குப் பொதுவாய் நின்றசொல் லொன்றற் குரித்தாயினவாறுகாண்க. ஆயினு மெளிதுணர் பொருட்கு விரோத மாகவு மரிதுணர் பொருட்குச் சேர்க்கை யாகவு மற்றொரு மொழியைக் கூட்டியுரைப்பது சிறப்பெனக் கொள்க. அங்ஙனம் புலியை - பூவாப்புண்டரீகம், எ-ம். தென்மேற்றிசை யானையை - பூவாக் குமுதம், எ-ம். இடபத்தை - பறவாநரை, எ-ம். தாழையை - உண்ணாக்குமரி, எ-ம். வேங்கை மரத்தை - பாயாவேங்கை, எ-ம். கண்ணை . இமைக்குவளை, எ-ம். இடையை - துவளுந்துடி, எ-ம். கணைக்காலை - ஊதாச்சங்கு, எ-ம். நெய்யை - வெண்டுப்பு, எ-ம். இராகத்தை - செவிக் கின்புகுக்கும் வண்ணம், எ-ம். பிறவுமித்தன்மையா லுணர்ந்த குறிப்பினைத் தோற்றிப் பலவற்றிற்குப் பொதுவாய்நின்ற திரிசொல் லொன்றற் குரியவாக வுரைப்பது சிறப்புள சொல்லுரிமையா மெனக் கொள்க. (உ-ம்.) விருத்தம். - "பாடாத கந்திருவம் பதிந்தெறியாக் கந்துகமுட், கோடாத கோணமுரை கூறாதகிள்ளை மலர், சூடாதபா டலம்போர்தொடாக்குந்தம் பின்னிக்கீழ், நீடாத சடிலமுகை நெகிழாமா வீங்குளவோ." எனப் பலபொருளைக்குறித்த பலதிரிசொல் லீண்டுக் குதிரை யொன்றனைத் தோற்றவந்தவாறு காண்க. எ-று. (5) | 196. | பலவினைக் குரிய பலபொருட் சொல்லொரு நிலைவரி னுரிமை நீத்தசொல் லரித்தே. | | (இ-ள்.) இனப்பொருள் வினைச்சொல்லுரிமையா மாறுணர்த்துதும். ஓரினப்பொருளவாகி வேறுபடுவினைக்குரிய பொருளுளவெனக் கண்டுணர்க. அவற்றுட் பலவகைகூடிவருங்கா லவ்வினப்பொருட்குப் பொதுச்சொல்லுரைப்ப துரிமையா மெனக்கொள்க. அங்ஙனம் வாச்சிய வினத்துட் கொட்டுவன - பறையே, ஊதுவன - குழலே, ஊர்வன - யாழே. பிறவுமன்ன. அணிகல னினத்துட் கவிப்பன - முடியே, கட்டுவன - மேகலையே, இடுவன - குழையே, |
|
|