வரவும் இசை நிறை மொழிகள் இரண்டு மூன்று நான்குமாக வடுக்கி வரவும் பெறுமெனக் கொள்க. (உ-ம்.) மற்றோ மற்றோ, என்றே யென்றே, பிறவு மசைநிலை. கள்ளர் கள்ளர், பாம்பு பாம்பு, தீத்தீத்தீ, போபோபோ, பிறவும் விரைவு. எய்யெய், எறி யெறி யெறி, பிறவும் வெகுளி. உய்யேனுய்யேன், ஐயா வென்னையா வென்னையா, வகன்றனையோ, பிறவுமவலம். வருக வருக, பொலிக பொலிக பொலிக, பிறவுமுவகை. படை படை, எங்கே யெங்கே யெங்கே, பிறவுமச்சம். ஏ எயம்ப லியம்பினான் நல்குமே நல்குமே நல்குமே, நாமகள் பாடுகோ பாடுகோ பாடுகோ, பிறவு மிசை நிறை. - "அசைநிலை யிரட்டியும் விரைவு மொழி மூன்றினு, மிசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்." - என்றார் தொல்காபப்யினாரு மென்றுணர்க. ஆகையிற் கால மிடம் பண் பொழுக்கஞ் சொல்லென விவ்வைந்தம் வழுவா முறைகாத் ததற்குரிமைப் பற்றிச் செப்புவ தறிவோர் கடனெனக் கொள்க. எ-று. (8) | 199. | அகப்பொருள் புறப்பொரு ளாமிரண் டவற்றுட் பெருகிய கைக்கிளை பெருந்திணைக் குறிஞ்சி யாதியைந் திணையென வகத்திணை யேழே கைகோ ளிரண்டாங் களவு கற்பே வதுவை வாழ்க்கை வரைவகப் பொருளே வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி யுழுஞை தும்பையேழ் புறத்திணை பகைநிரை யோட்ட றன்னிரை மீட்டல் பகைமேற் செல்லல் பகைக்கெதி ரூன்ற றன்னெயிற் காத்தல் பகையெயிற் கொள்ளல் போர்வெல்ல லெனமுறை புறப்பொரு டிணையே. | | (இ-ள்.) ஈண்டுக்கூறிய பொருணூல்வழிப் புறநடையாகையி லிங்ஙன முன்னோர் தந்த பொருணூற் றொகையுணர்த்துதும். ஆகையிற் செந்தமி ழுணர்ந்தோர் பொருளெலா மகப்பொருள் புறப்பொருளென் றிரு கூறுபாடெனப் பிரித்தவற்று ளகப்பொரு ளென்பதைக் காமமாகக் கொண்டதனுள்ளு மொருதலைக்காமங் கைக்கிளை யெனவும், பொருந்தாக்காமம் பெருந்திணையெனவும், அன்புடைக்காமங் குறிஞ்சிமுத லைந்நிலத்திற் குரித்தா யைந்திணை யெனவும், எழுதிணை பகுத்தபின் னிவற்றிற் கொழுக்கமுறையைக் கைகோளென் றதைக் களவு கற்பென் றிருவகைப்படுத்தி யதற்கதற்குரிய பலநடை பயிற்றலும், வதுவையின் முறையைக் காட்டலும், வதுவைபின் னிருவர் வாழ்க்கையை வகுத்தலும், வரைவெனும் பிரிவின்கட் புலம்புரை யுரைத்தலு மகப்பொருளென்றார். - அகப்பொருள்விளக்கம். - "அவற்றுள்கைக்கிளையுடைய தொருதலைக்காமம். - ஐந்திணையுடைய தன்புடைக்காமம். |
|
|