நான்காவது:- யாப்பதிகாரம். PART IV. - PROSODY | 201. | யாப்புற நலமெலா மிணைந்தவோர் சட்குணன் காப்புற வடிதொழீஇக் காட்டுதும் யாப்பே. | | (இ-ள்.) யாப்பிலக்கண மாமாறுணர்த்துதும். எந்நூலுரைப்பினும் அந் நூற்குப் பாயிர முரைத்தே நூலுரைக்கப்படும். அஃதென்னை - நன்னூல் வெண்பா. - "மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமு, மாடமைத்தோ ணல்லார்க் கணியும்போ - னாடிமு, னைதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும், பெய்துரையாவைத்தார் பெரிது." என்றார்பவணந்தியாசிரியர். ஆகலிற் பாயிரமுரைத்தன் முறையேயாம். பாயிரமெத்தனை வகைப்படும். பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் என விருவகைப்படும். பொதுப்பாயிரத் தினிலக்கணமென்னை. - நன்னூல். - "நூலேநுவல்வோ னுவலுந்திறனே, கொள்வோன் கோடற் கூற்றா மைந்து, மெல்லா நூற்கு மிவைபொதுப்பா யிரம்." எனவரும். சிறப்புப்பாயிரத்தி னிலக்கணமென்னை. - நன்னூல். - "ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலிய பொருளே, கேட்போர்பயனோ டாயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத் தியல்பே - காலங் களனே காரணமென்றிம், மூவகையேற்றி மொழிநருமுளரே." எனவரும். பாயிரமில்லாத நூல்களுளவோ. சிரமில்லாத வலவன் முதலியவுடலுயி ருளவாயினும் பாயிரமில்லாதநூல்க ளிலவாம். இத்தலைச் சூத்திர மென்னுதலிற்று. கடவுள்வணக்கமு மதிகாரமு நுதலிற்று. அதிகா ரங்கடோறுங் கடவுள் வணக்கங் கூறல்வேண்டுவ தென்னை. எவ் வுலகினு மெவ்வகைப்பட்ட மேன்பாட்டாருக்குங் கடவு ளுதவியன்றி கருதிய கருத்து நிறைவுறா தாதலாலே மக்களுடற்கு வதனம் போலவும் கோபுரத்திற்குச் சிகரம்போலவும், நூற்கலங்கார முகமாக நினைத்த கருத்து முட்டின்று முடியும் பொருட்டுக் கடவுள் வணக்கங் கூறல் வேண்டுவ தாயிற்று. ஆகலி லிஃது விதிவிலக்கன்று. இவ்வதிகாரமென்னபெயர்த்து. யாப்பதிகாரமென்னும் பெயர்த்து. இவ் வதிகாரமென் னுதலிற்று. மேற்கூறிய வெழுத்துக்க ளாலாகிய பலசொற்களாலும் பொருட் கிடனாகக் கற்றுவல்ல புலவ ரணி பெறப் பாடப்படு மிலக்கண நுதலிற்று. இவ்வதிகாரமெவ்வளவிற்று. ஓத்து வகையான்மூன்றுஞ் சூத்திரவகையானூறுமாகிய வளவிற்று. இம்மூன்றோதத்திற்கும் பெயரென்னை. இனிவருஞ்சூத்திரத்திற்காண்க. இவ்வதிகாரத்தாற் பயன்யாது. யாப்பா ராய்தல் பயன். யாப்பா ராய்தலினாலே மக்க ளுயிர்க்கு றும்பய னென்னை. பா, தாழிசை, துறை, விருத்தங்களாலாக்கப்பட்ட, அறம், |
|
|